IPL 2023 : நடத்தையின்றி நடந்துகொண்ட ஆவேஷ் கான், வசமாக செய்த அம்பயர் – டு பிளேஸிஸ்க்கு நேர்ந்த சோகம், நடந்தது என்ன

- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற்ற 15வது லீக் போட்டியில் பெங்களூருவை 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த லக்னோ 3வது வெற்றியை பதிவு செய்தது. சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்களில் 212/2 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விராட் கோலி 61, கேப்டன் டு பிளேஸிஸ் 79*, கிளன் மேக்ஸ்வெல் 59 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை அதிரடியாக எடுத்தனர். அதைத்தொடர்ந்து 213 ரன்களை துரத்திய லக்னோவுக்கு கெய்ல் மேயர்ஸ் 0, க்ருனால் பாண்டியா 0, தீபக் ஹூடா 9 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 23/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணியை அடுத்ததாக வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் 65 (30) ரன்கள் எடுத்து ஓரளவுக்கு காப்பாற்றி ஆட்டமிழந்த நிலையில் மறுபுறம் மெதுவாக விளையாடிய ராகுல் 18 (20) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். இருப்பினும் அடுத்த களமிறங்கி சரவெடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரான் 4 பவுண்டரி 7 சிக்சருடன் 62* (19) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். ஆனால் அந்த சமயத்தில் ஆயுஸ் படோனி 30, ஜெயதேவ் உடன்கட் 9, மார்க் வுட் என 1 லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கி பெங்களூரு போராடியது.

- Advertisement -

அம்பயர் அதிரடி:
அதனால் கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது எதிர்புறம் இருந்து வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறிய ரவி பிஷ்னோயை மன்கட் செய்வதில் ஹர்ஷல் படேல் சொதப்பினார். அதே போல் மீண்டும் வீசப்பட்ட கடைசி பந்தில் அப்போது தான் களமிறங்கி முதல் பந்தை எதிர்கொண்ட ஆவேஷ் கான் அடிக்காமல் தவற விட்ட பந்தை கச்சிதமாக பிடிக்க தவறிய தினேஷ் கார்த்திக் ரன் அவுட் செய்வதில் சொதப்பினார். அந்த சமயத்தில் 2 பேட்ஸ்மேன்களும் வெற்றிகரமாக சிங்கிள் எடுத்து லக்னோவுக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

அந்த சிறப்பான வெற்றியை ரவி பிஷ்னோய் வெறித்தனமாக ஓடி கொண்டாடிய நிலையில் ஆவேஷ் கான் தன்னுடைய ஹெல்மெட்டை தலையில் இருந்து கழற்றி மைதானத்தில் வீசி அடித்து எறிந்து ஆக்ரோஷமாக கொண்டாடினார். பொதுவாக ஹெல்மெட்டில் தாங்கள் விளையாடும் அணியின் லோகோ இருக்கும் என்பதால் ஒவ்வொரு வீரரும் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் வெற்றி கிடைத்த மிதப்பில் அதை மறந்து இளம் வயதின் ரத்த திமிரில் ஹெல்மெட்டை தூக்கி எறிந்த அவருடைய செயல் ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

- Advertisement -

குறிப்பாக இந்த வெற்றி வசமாக்கிய நிக்கோலஸ் பூரான் அப்படி செய்திருந்தால் கூட பரவாயில்லை ஆனால் கடைசி பந்தில் இறங்கி பந்தின் மீது பேட் படாத அளவுக்கு சுமாராக செயல்பட்டு தினேஷ் கார்த்திக் சொதப்பலால் கிடைத்த வெற்றியை என்னமோ சிக்ஸர் அடித்தது போல இவ்வளவு வெறித்தனமாக கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? என ரசிகர்கள் அவரை சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் ஹெல்மெட்டை தூக்கி எறிந்து கொண்டாடிய ஆவேஷ் கானை போட்டியின் முடிவில் நடுவர் புகார் தெரிவித்ததால் கண்டிப்பு தெரிவுத்துள்ள ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமான எச்சரிக்கையை கொடுத்துள்ளது.

அடுத்த முறை இவ்வாறு நடந்து கொண்டால் அபராதம் அல்லது தடை விதிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் எச்சரித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு. “லக்னோ அணியின் ஆவேஷ் கான் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக தண்டிக்கப்பட்டுள்ளார். அவர் 2.2 லெவல் 1 குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்றுக்கொண்டார்” என்று குறிப்பிட்டுள்ளது. அதேபோல இந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்க தவறிய பெங்களூரு கேப்டன் டு பிளேஸிஸ்க்கு இந்த சீசனில் முதல்முறையாக 12 லட்சம் அபராதத்தை விதித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க:RCB vs LSG : பெங்களூரு ரசிகர்களின் செயலுக்கு மோசமான வகையில் ரிப்ளை கொடுத்த கவுதம் கம்பீர – நடந்தது என்ன?

“ஐபிஎல் 2023 சீசன் 15வது லீக் போட்டியில் ஆர்சிபி மெதுவான ஓவர் ரேட்டை கடை பிடித்தது. ஓவர் ரேட் குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின்படி இந்த சீசனில் கேப்டன் டு பிளேஸிஸ்க்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement