விராட் கோலியும் தொடர்பில் தான் இருந்தார்.. மெகா ஏலத்தில் நடைபெற்ற சுவாரசியத்தை பகிர்ந்த – ஆர்.சி.பி இயக்குனர்

VK-and-DK
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது கடந்த மாதம் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் பங்கேற்ற அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு மெகா ஏலத்தில் தேர்ந்தெடுத்தது ரசிகர்கள் மத்தியிலும் அதிகளவு கவனத்தை ஈர்த்திருந்தது.

மெகா ஏலத்தில் விராட் கோலியின் பங்கு :

இந்த மெகா ஏலத்தில் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத ஆர்.சி.பி அணியானது அதிக இந்திய இந்திய வீரர்களை குறி வைத்து வாங்கி தங்களது அணியை வெளிப்படுத்தியுள்ளது அதோடு கலவையான அளவில் வெளிநாட்டு வீரர்களையும் வாங்கியுள்ளதால் அந்த அணியின் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த 2025-ஆம் ஆண்டிற்கான மெகா ஏலத்தின் போது முன்னணி வீரரான விராட் கோலி தினேஷ் கார்த்திக்குடன் தொலைபேசி தொடர்பில் இருந்தது குறித்து அந்த அணியின் நிர்வாக இயக்குனர் சில சுவாரசியமான தகவல்களை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இம்முறை ஆர்சிபி அணியானது நட்சத்திர வீரர்களுக்காக அதிக தொகைக்கு செல்லாமல் இந்திய வீரர்களை குறிவைத்து வாங்க நினைத்தது.

ஏனெனில் சின்னசாமி மைதானத்தில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்களை வாங்க வேண்டும் என்று கருதியே வெளிநாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இந்திய வீரர்களை அதிகளவில் வாங்கியது. அதன் காரணமாகவே ஜித்தேஷ் சர்மா, புவனேஸ்வர் குமார், க்ருனால் பாண்டியா, ரஷீத் தார் என பிளேயிங் லெவனில் விளையாடக்கூடிய சிறப்பான வீரர்களை வாங்கியுள்ளது.

- Advertisement -

அதுமட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களான லிவிங்ஸ்டன், பில் சால்ட், ரொமாரியோ ஷெப்பர்டு, டிம் டேவிட் ஆகியோரை வாங்கியுள்ளது. இந்த ஏலத்தின் போது தினேஷ் கார்த்திக்கின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதேபோன்று மெகா ஏலத்தின் போது தினேஷ் கார்த்திக் விராட் கோலியிடம் தொலைபேசி தொடர்பில் இருந்தார். அவரது ஆலோசனையின் படியே அணிக்கு தேவையான வீரர்களை அணி வாங்கியது.

இதையும் படிங்க : 2011 முதல் 2024-வரை இந்திய மண்ணில் சாதனை நிகழ்த்தியுள்ள அஷ்வின் – உலகளவில் இரண்டாவது இடம்

ஒரு சில வீரர்களை நாங்கள் அணியில் இருந்து இழந்து விட்டோம். ஆனாலும் அடுத்த மூன்று ஆண்டுகளை கணக்கில் கொண்டு மிகச் சிறப்பான முடிவை நாங்கள் எடுத்துள்ளதாக நினைக்கிறேன். நிச்சயம் சின்னசாமி மைதானத்திற்கு தேவையான வீரர்களை அணிக்குள் எடுத்து வந்துள்ளதாகவும் நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement