2011 முதல் 2024-வரை இந்திய மண்ணில் சாதனை நிகழ்த்தியுள்ள அஷ்வின் – உலகளவில் இரண்டாவது இடம்

Ashwin
- Advertisement -

இந்திய அணிக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதம் மற்றும் 14 அரைசதம் என 3053 ரன்களை பேட்டிங்கிலும், பந்துவீச்சில் 537 விக்கெட்களோடு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு அறிவித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்திய மண்ணில் சாதனையை நிகழ்த்திய அஷ்வின் :

அண்மையில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அஷ்வின் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அதனை தொடர்ந்து அடிலெய்டு நகரில் இரண்டாவதாக நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் பெரிய அளவில் சிறப்பாக செயல்படவில்லை.

- Advertisement -

அதற்கடுத்து நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன் காரணமாக அந்த போட்டியின் முடிவில் அஸ்வின் ஓய்வை அறிவித்திருந்தார். வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகள் என்றாலே அஸ்வினுக்கு பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைக்காது.

ஏனெனில் வெளிநாட்டில் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதமாக ஆடுகளங்கள் இருக்காது என்பதனால் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா தான் முதன்மை தேர்வாக இருப்பார். ஆனால் இந்திய மண்ணைப் பொறுத்தவரை விஷயமே வேறு.

- Advertisement -

ஏனெனில் கடந்து 2011-ஆம் ஆண்டு அவர் அறிமுகமான டெஸ்ட் போட்டியில் இருந்து 2024 வரை இந்திய அணி இந்திய மண்ணில் விளையாடிய ஒரு போட்டியை கூட அஸ்வின் இங்கு தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் இந்திய அணி கடந்த 2011 முதல் 2024 வரை இந்திய மண்ணில் விளையாடிய 65 டெஸ்ட் போட்டிகளிலுமே அஸ்வின் ஒரு போட்டியில் கூட தவறவிடாமல் விளையாடியுள்ளார்.

இதையும் படிங்க : என் பேட்டிங் சுமார்ன்னு ஒத்துக்குறேன்.. ஆனா இதை செஞ்சா போதும் பெரிய ரன்ஸ் அடிப்பேன்.. ரோஹித் பேட்டி

இதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளை விளையாடிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் இங்கிலாந்தில் நடைபெற்ற 89 டெஸ்ட்டில் தொடர்ச்சியாக மிஸ் செய்யாமல் விளையாடினார். அதன் பிறகு அஸ்வின் தான் தற்போது 65 டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement