என் பேட்டிங் சுமார்ன்னு ஒத்துக்குறேன்.. ஆனா இதை செஞ்சா போதும் பெரிய ரன்ஸ் அடிப்பேன்.. ரோஹித் பேட்டி

Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்று முன்னிலையில் பெற்றது. ஆனால் ரோஹித் சர்மா தலைமையில் இரண்டாவது போட்டியில் சுமாராக விளையாடிய இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்தது.

காபாவில் நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் தடுமாறிய இந்தியா மழையின் உதவியுடன் டிரா செய்தது. அதனால் 1 – 1* என்ற கணக்கில் சமனில் இருக்கும் இந்தத் தொடரின் நான்காவது போட்டியில் வெல்லும் முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருகிறது. முன்னதாக இந்தத் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா சுமாராக விளையாடி வருவது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்து வருகிறது.

- Advertisement -

ரோஹித் தடுமாற்றம்:

கடந்த நியூசிலாந்து தொடரில் ஓப்பனிங்கில் தடுமாறிய அவர் இந்தத் தொடரில் மிடில் ஆர்டரில் விளையாடுகிறார். அந்த இடத்தில் அதை விட மோசமாக விளையாடும் அவர் இந்தியாவின் தோல்விக்கு காரணமாகவும் இருந்தார். எனவே அஸ்வினுக்கு அடுத்தபடியாக.ரோகித் சர்மா ஓய்வு பெறலாம் என்று இந்திய ரசிகர்களே ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தாம் நன்றாக பேட்டிங் செய்யவில்லை என்பதை ஒப்புக் கொள்வதாக ரோஹித் கூறியுள்ளார்.

அதே சமயம் நன்றாக பயிற்சிகளை எடுத்து தயாராகி வரும் தாம் களத்தில் அதிக நேரத்தை செலவிட்டு விளையாடினால் பெரிய ரன்கள் தாமாக வரும் என்றும் ரோஹித் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. அதை ஒப்புக்கொள்வதில் எந்த தீங்கும் இல்லை. ஆனால் எனது மனதில் என்ன இருக்கிறது என்றும் எவ்வாறு தயாராகிறேன் என்பதும் எனக்குத் தெரியும்”

- Advertisement -

ரோஹித் நம்பிக்கை:

“எனது தயாராகும் முறையில் அனைத்து கட்டங்களையும் நிரப்பியுள்ளேன். எனவே இவை அனைத்தும் களத்தில் முடிந்தளவுக்கு அதிக நேரத்தை செலவிடுவதை பற்றியதாகும். அதை என்னால் செய்ய முடியும் என்று உறுதியாக இருக்கிறேன். உன்னுடைய உடலும் கால்களும் நன்றாக நகரும் வரை எப்படி செல்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி. சில நேரங்களில் புள்ளி விவரங்கள் இவர் பெரிய ரன்கள் குவிக்கவில்லை என்று சொல்லும்”

இதையும் படிங்க: ஜஸ்ப்ரித் பும்ரா வலது கை வாசிம் அக்ரம்.. இது ஆகலன்னா ஆஸி ஜெயிப்பது கஷ்டம்.. லாங்கர் பாராட்டு

“ஆனால் என்னை போன்ற நபருக்கு எனது மனதில் எப்படி உணர்கிறேன், எவ்வாறு தயாராகிறேன் என்பதே முக்கியம். உண்மையில் என்னைப் பற்றி நான் நன்றாக உணர்கிறேன். தற்போதைய நிலையில் ரன்கள் அதை காண்பிக்காமல் இருக்கலாம். ஆனால் எனக்குள் வித்தியாசமான உணர்வு இருக்கிறது” என்று கூறினார். மொத்தத்தில் அடுத்த 2 போட்டிகளில் அசத்த வில்லையெனில் ரோஹித் சர்மாவும் ஓய்வு பெற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement