- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவுக்காக அந்த உலகக் கோப்பை வெல்வதே அடுத்த டார்கெட்.. விராட் கோலி அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றியுடன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 36 வயதை சராசரியாக கடந்து விட்ட அவர்கள் சமீப வருடங்களாகவே தொடர்ச்சியாகப் பெரிய ரன்கள் குவிப்பதற்கு தடுமாறி வருகிறார்கள்.

அதனால் அவ்வப்போது விமர்சனங்களை சந்திக்கும் அவர்கள் 2024 டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச 20 ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதன் பின் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு அவர்கள் முக்கிய காரணமானார்கள். அதனால் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு ரோஹித், கோலி ஓய்வு பெற வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கினார்.

- Advertisement -

அடுத்த இலக்கு:

அந்த சூழ்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு அவர்கள் இருவருமே முக்கிய பங்காற்றினர். குறிப்பாக விராட் கோலி அரையிறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். ரோகித் சர்மா முக்கியமான இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியா 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார்.

அந்த வகையில் தங்களை சாம்பியன் பிளேயர்கள் என்பதை நிரூபித்த அவர்கள் விமர்சனங்களுக்கு பதிலடிக் கொடுத்தனர். அதன் காரணமாக அவர்கள் தொடர்ந்து இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள் என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்தியாவுக்காக 2027 டி20 உலகக் கோப்பையை வெல்வது தமது பயணத்தில் அடுத்த மிகப்பெரிய படி என்று விராட் கோலி அறிவித்துள்ளார்.

- Advertisement -

கோலி அறிவிப்பு:

மும்பையில் சமீபத்தில் தனியார் நிகழ்ச்சியில் விராட் கோலி பங்கேற்றார். அங்கே அவரிடம் உங்களுடைய கேரியரின் அடுத்த பெரிய அடி என்ன? என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்கு விராட் கோலி பதிலளித்தது பின்வருமாறு. “அடுத்தப் பெரிய அடி என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அடுத்த உலகக் கோப்பையை வெல்வது பெரிய படியாக இருக்கலாம்” என்று சொன்னதும் அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: “பவர்பிளே கிங்” டிரென்ட் போல்ட் நிகழ்த்திய வரலாற்று சாதனை.. முதல் ஓவரில் மேஜிக்கை நிகழ்த்தும் மெஜிஷியன்

கடைசியாக தோனி தலைமையில் இந்தியா 2011 உலகக் கோப்பையை வென்ற அணியில் இளம் வீரராக விராட் கோலி இடம் பிடித்திருந்தார். அதன் பின் 2015, 2019, 2023 உலகக் கோப்பைகளில் விளையாடிய அவர் தோல்வியை சந்தித்தார். அடுத்ததாக தென்னாபிரிக்காவில் 38 வயதில் தனது அற்புதமான ஃபிட்னஸ் காரணமாக 2027 உலகக்கோப்பையில் விராட் கோலி விளையாடுவதற்கு தயாராக உள்ளார். ஆனால் ரோஹித் விளையாடுவாரா என்பது கேள்வியாகவே இருக்கிறது.

- Advertisement -