உலகக்கோப்பை 2023 : இறுதிப்போட்டியே ஆடல.. அதுக்குள்ளே விருதினை உறுதி செய்த கிங் கோலி – விவரம் இதோ

Kohli
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளை மறுதினம் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியுடன் நிறைவுபெற இருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டிக்கு களமிறங்குவதற்கு முன்னதாகவே இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நடப்பு உலக கோப்பை தொடரின் தங்க பேட் விருதினை வெல்வதை உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

ஏனெனில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 101 ரன்கள் சராசரியுடன் 711 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக குவின்டன் டி காக் 594 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அதனைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் ரச்சின் ரவீந்திரா 578 ரன்களுடன் இருக்கிறார். நான்காவது இடத்தில் டேரல் மிட்சல் 552 ரன்களுடனும், ஐந்தாவது இடத்தில் ரோகித் சர்மா 550 ரன்களுடனும் இருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் ஆகியவை அரையிறுதியில் தோல்வியை சந்தித்ததால் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை இழந்துள்ளனர். எனவே விராட் கோலியே அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பார். ஒருவேளை கோலியை மிஞ்ச வேண்டுமெனில் ரோகித் சர்மா இறுதிப்போட்டியின் போது 161 ரன்கள் அடிக்க வேண்டும்.

இதையும் படிங்க : இந்தியா நல்ல டீம்.. ஆனா அதை யார் செய்றாங்களோ அவங்களே ஜெயிப்பாங்க.. பெவன் கணிப்பு

ஆனால் அவ்வளவு ரன்களை அடிப்பது சாத்தியமில்லை என்பதும், அப்படியே ரோகித் அடித்தாலும் விராட் கோலியும் அந்த போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளதால் நிச்சயம் விராட் கோலியை ரோகித்தாலும் 99% எட்ட முடியாது. எனவே இறுதிப் போட்டிக்கு களமிறங்குவதற்கு முன்னதாகவே இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக விராட் கோலி தங்க பேட் விருதினை வெல்வது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement