இந்தியா நல்ல டீம்.. ஆனா அதை யார் செய்றாங்களோ அவங்களே ஜெயிப்பாங்க.. பெவன் கணிப்பு

Micheal Bevan
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்கான ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி இந்தியாவில் உள்ள அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் எதிரணிகளை தோற்கடித்த ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா மற்றும் பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிகள் கோப்பையை வெல்வதற்காக மோத உள்ளன.

அப்போட்டியில் காலம் காலமாக ஐசிசி தொடர்களில் அழுத்தமான சூழ்நிலைகளிலும் நாக் அவுட் போட்டிகளிலும் அபாரமாக செயல்பட்டு வரும் காரணத்தாலேயே ஆஸ்திரேலியா 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. அதிலும் இத்தொடரில் ஆரம்பத்திலேயே தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தாலும் அதன் பின் அடுத்த டுத்த வெற்றிகளுடன் ஃபைனல் வந்துள்ள ஆஸ்திரேலியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போல இப்போட்டிலும் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை முத்தமிட தயாராகியுள்ளது.

- Advertisement -

மைக்கேல் பெவன் கணிப்பு:
இருப்பினும் அதற்கு சவாலாக சொந்த மண்ணில் எதிரணிகளை தோற்கடித்து 10 தொடர் வெற்றிகளுடன் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் இந்தியா இப்போட்டியில் வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தி சரித்திரம் படைக்க போராட உள்ளது. குறிப்பாக 2003 உலகக்கோப்பை மற்றும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தோல்விகளுக்கு ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து 2011 போல கோப்பையை வெல்ல ரோஹித் தலைமையிலான இந்திய படை தயாராகியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளது என்றாலும் அதற்கு சவாலை கொடுக்க ஆஸ்திரேலியாவும் தரமான அணியாக இருப்பதாக முன்னாள் ஜாம்பவான் வீரர் மைக்கேல் பெவன் தெரிவித்துள்ளார். எனவே இவ்விரு அணிகளில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிக்கும் அணிக்கு கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உலகக்கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறுவது சிறப்பான சாதனையாகும். அது அடிக்கடி நடைபெறாத ஒன்றாகும். இம்முறை நமக்கு சிறப்பாக விளையாடி டாப் ஃபார்மில் இருக்கும் 2 அணிகள் ஃபைனலில் மோதுவதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் எந்த சூழ்நிலையிலும் போட்டியில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் திறமை கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் நிறைந்திருக்கின்றனர். இருப்பினும் ஆஸ்திரேலியர்கள் தங்களுடைய பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும் என்று நான் நம்புகிறேன்”

இதையும் படிங்க: நல்லா தானே போய்கிட்டு இருக்கு.. கப் கனவுல மண்ணை அள்ளி போடாதீங்க.. இந்திய ரசிகர்கள் கவலை

“மறுபுறம் இந்தியா வெற்றி பெறுவதற்கு தெளிவான வாய்ப்புகள் இருக்கிறது. அதே சமயம் ஆஸ்திரேலியாவும் 2023 உலகக்கோப்பை வெல்வதற்காக அங்கே இருக்கிறது. எனவே யார் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறார்களோ அவர்களுக்கு நல்ல வாய்ப்புள்ளது. இரு அணிகளுமே பேட்டிங்கில் நல்ல அணிகளாக இருக்கிறது. அதில் ஆஸ்திரேலியா இத்தொடரில் மெதுவான துவக்கத்தை பெற்றாலும் அபாரமான கம்பேக் கொடுத்துள்ளனர்” என்று கூறினார்.

Advertisement