நல்லா தானே போய்கிட்டு இருக்கு.. கப் கனவுல மண்ணை அள்ளி போடாதீங்க.. இந்திய ரசிகர்கள் கவலை

Richard Kettleborough
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் கோலாகலமாக நடைபெற உள்ள வெற்றியாளரை தீர்மானிக்கப் போகும் மாபெரும் இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா மற்றும் பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிகள் கோப்பையை வெல்வதற்காக மோதுகின்றன.

அந்த போட்டியில் இந்தியாவை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வீழ்த்தியதை போல் சிறப்பாக விளையாடி 6வது உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலியா விளையாட உள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் எந்த எதிரணிகளுக்கும் அடங்காமல் தொடர்ந்து 10 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா 2011 போல கோப்பையை வெல்லாமல் ஓயமாட்டோம் என்ற வகையில் மிரட்டி வருகிறது.

- Advertisement -

ரசிகர்கள் கவலை:
குறிப்பாக ரோஹித் சர்மா முதல் ஷமி வரை தற்சமயத்தில் அனைத்து வீரர்களும் அபாரமாக செயல்பட்டு சிறப்பான ஃபார்மில் இருப்பதால் நிச்சயம் இம்முறை இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் ஃபைனலில் இரு அணிகளுக்கும் சமமான தீர்ப்புகளை வழங்கி வெற்றிகளில் முக்கிய பங்காற்றக்கூடிய நடுவர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதன் படி இப்போட்டியின் முதன்மை நடுவராக ஆன்டி பைஃகிராப்ட், 4வது நடுவராக கிறிஸ் கேப்ஃனி, 3வது மற்றும் டிஆர்எஸ் தீர்ப்புகளை வழங்கப்போகும் நடுவராக ஜோயல் வில்சன் ஆகியோர் செயல்படுவார்கள் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. ஆனால் களத்தில் இருந்து பரபரப்பான தருணங்களில் முக்கியமான தீர்ப்புகளை வழங்கப் போகும் கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ரிச்சர்ட் கெட்டல்போரஃப் ஆகியோர் செயல்படுபவர்கள் என்று ஐசிசி அறிவித்துள்ளது தாம் இந்திய ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் இதில் ரிச்சர்ட் கெட்டல்போரஃப் எனும் அம்பயர் களத்தில் இருந்து தீர்ப்புகளை வழங்கிய எந்த நாக் அவுட் போட்டியிலும் இந்தியா வெற்றி கண்டதில்லை. குறிப்பாக 2014 டி20 உலகக்கோப்பை ஃபைனலில் இலங்கைக்கு எதிராக 2015 உலகக்கோப்பை செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2016 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2017 சாம்பியன் டிராபி ஃபைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக 2019 உலகக்கோப்பை செமி ஃபைனலில் நியூசிலாந்துக்கு எதிராக அவர் கள நடுவராக இருந்த போது இந்தியா தோல்விகளை சந்தித்தது.

இதையும் படிங்க: இந்தியாவை ஃபைனலில் தோற்கடிக்க உங்களால் முடியும்.. அதை மட்டும் செய்ங்க.. ஆஸிக்கு நாசர் ஹுசைன் ஐடியா

அதை விட 2021, 2023 ஃபைனலில் முறையே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களத்தில் வராமல் அவர் வெறும் டிவி அம்பயராக மட்டுமே இருந்த போதும் கூட இந்தியாவால் வெற்றி காண முடியவில்லை. அதாவது நாற்காலியை விட்டு நகர்ந்தால் சச்சின் அவுட்டாகி விடுவார் என்ற இந்திய ரசிகர்களின் பல குருட்டுத்தனமான நம்பிக்கைகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. அதனால் “எல்லாம் நல்லா தானே போய்கிட்டு இருக்கு” என்று கவலையை வெளிப்படுத்தும் ரசிகர்கள் இந்த பரிதாப நம்பிக்கையையும் இம்முறை இந்தியா உடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Advertisement