இந்தியாவை ஃபைனலில் தோற்கடிக்க உங்களால் முடியும்.. அதை மட்டும் செய்ங்க.. ஆஸிக்கு நாசர் ஹுசைன் ஐடியா

Nasser Hussain 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத் நகரில் வரும் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. அதில் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்று உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக அவதரிக்கப் போவது யார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.

அதில் ஆஸ்திரேலியா ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான திகழ்வதுடன் அழுத்தமான சூழ்நிலைகளிலும் நாக் அவுட் போட்டிகளிலும் எப்படி சிறப்பாக செயல்பட்டு வெற்றி காண வேண்டும் என்பதை நன்றாக தெரிந்த அணியாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆரம்பத்திலேயே தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தாலும் அதன் பின் கொதித்தெழுந்து ஃபைனல் வந்துள்ள அந்த அணி இந்தியாவை தோற்கடித்து 6வது கோப்பையை வெல்வதற்கு தயாராக உள்ளது.

- Advertisement -

ஹுசைன் ஐடியா:
மறுபுறம் சொந்த மண்ணில் நியூசிலாந்து உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்து தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால் இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2011 போல கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்குகிறது. குறிப்பாக 2003 உலகக்கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போன்ற தோல்விகளுக்கு இம்முறை ஆஸ்திரேலியாவை பழி தீர்த்து சாம்பியன் பட்டத்தை முத்தமிடும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.

இந்நிலையில் ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் போன்ற ஜாம்பவான்களை பார்த்து வளர்ந்த தற்போதைய ஆஸ்திரேலிய அணியினரால் இந்தியாவை தோற்கடித்து 6வது கோப்பையை வெல்ல முடியும் என்று நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டீவ் ஸ்மித் போன்றவர் பேட்டிங்கில் சதமடித்து சாதாரணமான நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினாலே இந்தியாவை வீழ்த்த முடியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தற்போதைய அணியில் இருக்கும் வீரர்கள் ஏற்கனவே அழுத்தமான சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு பட் கமின்ஸ் தலைமையில் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வென்றுள்ளார்கள். அந்த வகையில் டாப் அணியான அவர்கள் மனதளவில் உறுதியாக ஃபைனலுக்கு வந்துள்ளார்கள். இந்த வீரர்கள் பாண்டிங், ஸ்டீவ் வாக் சகாப்தத்தை பார்த்து வளர்ந்தவர்கள் என்பதால் பெயருக்காக மட்டும் ஃபைனல் வரவில்லை கோப்பையை வெல்வதற்காக ஃபைனலுக்கு வந்துள்ளார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்”

இதையும் படிங்க: வீக்னெஸ் இல்லாத இந்திய அணியில்.. சின்ன ஓட்டைய கண்டுபிடிச்சிட்டோம்.. ஃபைனலில் சந்திப்போம்.. ஹேசல்வுட் பேட்டி

“குறிப்பாக 6வது கோப்பையை வென்று வெற்றியுடன் நாட்டுக்கு திரும்பும் என்ற எண்ணத்துடன் அவர்கள் வந்துள்ளார்கள். எனவே மிகவும் கடினமான அவர்களில் வார்னர், ஹெட், மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோருடன் ஸ்மித்தும் சேர்ந்து அசத்த வேண்டும். குறிப்பாக ஸ்மித்திடம் திறமை இருக்கிறது. அவர் ஃபைனலில் நம்ப முடியாத சதமடித்தால் வாய்ப்பிருக்கிறது. எனவே அவர்கள் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் சராசரிக்கும் அதிகமாக செயல்பட்டாலே இந்தியாவை வீழ்த்த முடியும்” என்று கூறினார்

Advertisement