- Advertisement -
ஐ.பி.எல்

ஐ.பி.எல் வரலாற்றில் மேலும் ஒரு இமாலய சாதனையை நிகழ்த்தி கிங் என்பதை நிரூபித்த – விராட் கோலி

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற விராட் கோலி கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடியிருந்தார். அதன்பிறகு எந்த ஒரு டி20 போட்டியிலும் விளையாடாமல் இருந்த அவர் ஓராண்டிற்கு பிறகு நேற்று இந்தியாவில் தொடங்கிய 2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார்.

விராட் கோலி நிகழ்த்திய மேலும் ஒரு வரலாற்று சாதனை :

ஓராண்டாக எந்தவொரு டி20 போட்டியிலும் விளையாடாமல் இருந்த அவரது பார்ம் எவ்வாறு இருக்கும்? என்று பலரும் யோசித்த வேளையில் நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் அணி நிர்ணயித்த 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய போது துவக்க வீரராக களமிறங்கி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இந்த போட்டியில் 38 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் என 69 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் ஆர்.சி.பி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் வேளையில் இன்றளவும் அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் நேற்றைய போட்டியில் ஆட்டமிழக்காமல் அவர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் அடித்த 69 ரன்கள் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் மேலும் ஒரு சாதனையை விராட் கோலி பதிவு செய்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

இதையும் படிங்க : 25-26 பாலுக்கு முன்னாடி முடிக்கனும்.. தேவ்தத் படிக்கலுக்கு கொடுத்த அட்வைஸ் குறித்து – விராட் கோலி பேச்சு

நேற்றைய போட்டியில் அவர் சேசிங்கில் 69 ரன்கள் அடித்ததன் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் சேசிங்கில் மட்டும் இதுவரை 4027 ரன்களை குவித்துள்ளார். அவரை தவிர்த்து எந்த ஒரு வீரரும் ஐ.பி.எல் போட்டிகளில் சேசிங்கில் 3500 ரன்களை கூட குவிக்காத வேளையில் முதல் வீரராக ஐ.பி.எல் சேசிங்கில் 4000 ரன்களை தொட்ட வீரர் என்ற சாதனையை விராட் கோலி நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -