25-26 பாலுக்கு முன்னாடி முடிக்கனும்.. தேவ்தத் படிக்கலுக்கு கொடுத்த அட்வைஸ் குறித்து – விராட் கோலி பேச்சு

Kohli and Padikkal
- Advertisement -

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நேற்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது சன் ரைசர்ஸ் அணி நிர்ணயித்த 202 ரன்கள் என்கிற இலக்கினை 15.4 ஓவர்களில் சேசிங் செய்து அசத்தியது. அதிலும் குறிப்பாக 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆர்.சி.பி அணியானது 203 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தேவ்தத் படிக்கலுக்கு நான் கொடுத்த அட்வைஸ் : விராட் கோலி பேச்சு

இந்த போட்டியின் போது ஆர்.சி.பி அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கிய பிலிப் சால்ட் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதும் இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். தேவ்தத் படிக்கல் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

அதேவேளையில் இறுதிவரை களத்தில் நின்ற விராட் கோலி 38 பந்துகளில் 69 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் இருவரது சிறப்பான பார்ட்னர்ஷிப் அணியின் வெற்றியை உறுதி செய்திருந்தது. இவ்வேளையில் ஆரம்பத்திலேயே விக்கெட் விழுந்த பின்னர் படிக்கலின் ஆட்டம் எவ்வாறு அமைந்தது என்பது குறித்து போட்டி முடிந்து சில கருத்துக்களை விராட் கோலி பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : இன்று படிக்கல் முதல் பந்தில் இருந்து மிகச் சிறப்பாக விளையாடினார். நான் பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாட திட்டமிட்டேன். ஆனால் படிக்கல் விளையாடும் விதத்தை பார்க்கும் போது அவருக்கு ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்தாலே அவரிடம் இருந்து பவுண்டரிகள் வரும் என தோன்றியது. மேலும் அவரது அதிரடியான ஆட்டம் எதிரணியிடம் இருந்து போட்டியை எங்கள் வசம் கொண்டுவரும் என்பதையும் புரிந்து கொண்டேன்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி இந்த விடயத்துல நம்பர் 1.. அதனால் தான் நான் கவலை இல்லாம ஆடன – கேப்டன் புகழாரம்

ஒரு கட்டத்தில் ஸ்லோவர் பந்தை மிட் ஆன் திசையில் அவர் மிகப்பெரிய சிக்சர் அடித்தார். அப்போது நான் அவரிடம் சென்று உன்னுடைய பேட்டிங் இன்று மிகச் சிறப்பாக இருக்கிறது. நீ எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அதிரடியாகவே விளையாடு. நாம் 25-26 பந்துகள் மிச்சம் வைத்து போட்டியில் வெற்றி பெற்றால் ரன் ரேட்டிலும் அது கூடுதல் சாதகத்தை அளிக்கும் என கூறினேன். அவரும் அதை புரிந்துகொண்டு மிகச்சிறப்பான அதிரடியை வெளிப்படுத்தினார் என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement