விராட் கோலி இந்த விடயத்துல நம்பர் 1.. அதனால் தான் நான் கவலை இல்லாம ஆடன – கேப்டன் புகழாரம்

Patidar and Kohli
- Advertisement -

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான 19-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதிய வேளையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது :

விராட் கோலியை பாராட்ட வார்த்தைகள் : ரஜத் பட்டிதார்

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவிக்க பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 203 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பெங்களூரு அணி விளையாடிய அதிரடியான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரஜத் பட்டிதார் விராட் கோலியின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டி பேசியிருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் மைதானத்தின் தன்மையை புரிந்து கொண்டு விளையாட நினைத்தோம். அந்த வகையில் இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் அதிரடியாக விளையாடினோம்.

விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தனர். அவர்கள் கொடுத்த பலமான அடித்தளம் அடுத்து வரும் வீரர்களுக்கும் எளிதாக விளையாட சுதந்திரம் அளித்தது. அந்த வகையில் நான் உள்ளே வந்ததும் அதிரடியாக விளையாடினேன். அதுமட்டும் இன்றி விராட் கோலியை பற்றி புகழ்வதற்கு வார்த்தைகளை கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆர்.சி.பி பத்தி நெறைய கேள்வி பட்டிருக்கேன்.. அங்கிருந்து இது ஸ்டார்ட்டானது ஹேப்பி – ஆட்டநாயகன் பேட்டி

அவர் எப்பொழுது விளையாட சென்றாலும் சேசிங் என்று வந்துவிட்டால் அவர்தான் நம்பர் 1 வீரர். அவர் களத்தில் இருக்கும் போது இறுதிவரை போட்டியை கொண்டு சென்று முடித்துக் கொடுப்பார் என்கிற நம்பிக்கை எப்போதுமே எனக்கு உண்டு. அதனால் தான் நான் சுதந்திரமாக அதிரடியாக விளையாடியதாக ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement