டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகிய ஜாம்பவான்களுடன் எலைட் சாதனை பட்டியலில் இணைந்த – விராட் கோலி

Kohli-1
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இதுவரை நடந்த 2 போட்டிகளுக்கு பின் 1 – 1 என சமனில் உள்ள இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து 223 ரன்கள் குவித்து பின்னர் தென் ஆப்பிரிக்காவை தனது அபார பந்துவீச்சால் வெறும் 210 ரன்களுக்கு சுருட்டியது, இதை அடுத்து 2வது இன்னிங்சில் ஆடிவரும் இந்தியா 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 70 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.

IND

- Advertisement -

கலக்கும் கோலி:
இந்த முக்கியமான போட்டியில் இந்திய வீரர்கள் சொதப்பிய வேளையில் முதல் இன்னிங்சில் நங்கூரமாக பேட்டிங் செய்த கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் குவித்து அசத்தினார். கடந்த 2019 க்கு பின் சதம் அடிக்க முடியாமல் தடுமாறி வரும் அவர் முதல் இன்னிங்ஸ்சில் சதத்தை தவறவிட்ட போதிலும் 2வது இன்னிங்சில் மீண்டும் பொறுமையுடன் பேட்டிங் செய்து 14* ரன்களில் விளையாடி வருகிறார்.இந்த போட்டியில் பேட்டிங்கில் சதத்தை தவறவிட்டாலும் கேட்ச் பிடிப்பதில் சதத்தை அடித்து புதிய சூப்பர் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

100 கேட்ச்கள்:
நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்சின் போது தென்ஆப்பிரிக்க வீரர்கள் ராசி வேன் டேர் டுஷன் மற்றும் தெம்பா பவுமா ஆகியோர் கொடுத்த 2 கேட்ச்களை லாவகமாக பிடித்த விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 கேட்ச்களை கடந்தார். “இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 கேட்ச்களை பிடிக்கும் 6வது இந்திய வீரர்” என்ற புதிய சாதனையை விராட் கோலி நேற்று படைத்தார்.

kohli

இதற்கு முன் இந்திய ஜாம்பவான்களான ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் போன்ற வீரர்கள் ஏற்கனவே 100 கேட்ச்களை பிடித்து சாதனை படைத்துள்ளார்கள். தற்போது விராட் கோலியும் அந்த ஜாம்பவான்கள் இடம் வகிக்கும் “எலைட் சாதனை” பட்டியலில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். சரி டெஸ்ட் கிரிக்கெட்டில் 100க்கும் மேற்பட்ட கேட்ச்களை பிடித்த இந்திய வீரர்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்:

- Advertisement -

1. ராகுல் டிராவிட் : இந்தியாவின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் 209 இன்னிங்ஸ்களில் 210 கேட்ச்களை பிடித்து “டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த இந்திய வீரராக சாதித்துள்ளார்”. இது மட்டுமல்லாமல் இதன் வாயிலாக “ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர்” என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

Dravid

2. விவிஎஸ் லக்ஷ்மன் : டெஸ்ட் கிரிக்கெட்டின் ஸ்பெஷலிஸ்ட் வீரர் என ரசிகர்களால் புகழப்படும் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் இந்தியாவுக்காக “248 இன்னிங்ஸ்களில் 135 கேட்ச்களை” பிடித்து இப்பட்டியலில் 2வது இடத்தை பிடிக்கிறார்.

- Advertisement -

3. சச்சின் டெண்டுல்கர் : சச்சின் டெண்டுல்கர் இல்லாத சாதனை பட்டியலா என்பது போல் 366 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள இந்தியா கண்ட மகத்தான கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் “115 கேட்ச்களை” பிடித்து இப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.

sachin

4. சுனில் கவாஸ்கர் : இந்தியாவின் தலைசிறந்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் “216 இன்னிங்ஸ்களில் இந்தியாவுக்காக விளையாடி 108 கேட்ச்களை” பிடித்து இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

5. முகமது அசாருதீன் : இந்தியாவின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் “177 இன்னிங்ஸ்களில் 105 கேட்ச்களை” பிடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த 5வது இந்திய வீரராக உள்ளார்.

இதையும் படிங்க : புதிதாக இணைந்துள்ள 2 அணிக்கும் வீரர்களை தேர்வு செய்வதில் ரூல்ஸ் போட்ட – ஐ.பி.எல் நிர்வாகம்

6. விராட் கோலி : தற்போது விராட் கோலி 100* கேட்ச்களுடன் இந்தப் பட்டியலில் 6வது வீரராக இணைந்துள்ளார்.

Advertisement