புதிதாக இணைந்துள்ள 2 அணிக்கும் வீரர்களை தேர்வு செய்வதில் ரூல்ஸ் போட்ட – ஐ.பி.எல் நிர்வாகம்

Auction
Advertisement

இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் துவங்க உள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகளும் இணைந்து விளையாட இருக்கின்றன. ஏற்கனவே 8 அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்த வேளையில் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் 3 வீரர்களை ஏலத்தில் முன்பாக தேர்வு செய்து கொள்ளலாம் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்தது.

IPL
IPL Cup

அதன்படி இவ்விரு அணிகளும் 3 வீரர்களை தேர்வு செய்ய 33 கோடி ரூபாய் வரை செலவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் தேர்வு செய்ய இருக்கும் முதல் வீரருக்கு 15 கோடி ரூபாயும், இரண்டாவது வீரருக்கு 11 கோடி ரூபாயும், மூன்றாவது வீரருக்கு 7 கோடி ரூபாய் என்ற அடிப்படையில் செலவு செய்து கொள்ளலாம்.

அதே போன்று இரண்டு வீரர்களை மட்டும் எடுக்க நினைத்தால் முதல் வீரருக்கு 14 கோடி ரூபாயும், இரண்டாவது வீரருக்கு 10 கோடி ரூபாயும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வீரரை அதிகபட்சமாக 14 கோடி ரூபாய் மட்டுமே வழங்கி வாங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

Auction

பிப்ரவரி 12,13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இந்த சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் தேர்வு செய்ய இருக்கும் வீரர்களின் பட்டியலை தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வரும் 22ஆம் தேதிக்குள் தக்க வைக்கும் வீரார்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் பிசிசிஐ ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்லயும் இந்த ரூல்ஸ்ச போட்டாதான் பவுலர்கள் ஒழுங்கா இருப்பாங்க – டேல் ஸ்டெயின் கருத்து

இந்த வருட ஐ.பி.எல் தொடரானது நெருங்கி வரும் வேளையில் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் போட்டிகள் இங்கு திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement