டெஸ்ட் கிரிக்கெட்லயும் இந்த ரூல்ஸ்ச போட்டாதான் பவுலர்கள் ஒழுங்கா இருப்பாங்க – டேல் ஸ்டெயின் கருத்து

Steyn
- Advertisement -

தென்ஆப்பிரிக்கா – இந்தியா ஆகிய அணிகள் மோதி வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றியைப் பெற்றதால் சமனில் உள்ள இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து தனது முதல் இன்னிங்சில் போராடி 223 ரன்கள் எடுத்தது, அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் குவித்தார்.

பறக்கும் நோ – பால் :
இதை அடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்காவை அபாரமாக பந்துவீசிய இந்திய பவுலர்கள் வெறும் 210 ரன்களுக்கு சுருட்டினர், அதிகபட்சமாக தென்ஆப்பிரிக்காவுக்கு பீட்டர்சன் 72 ரன்களும் இந்தியாவுக்கு ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்கள். இந்நிலையில் இந்த தொடரில் நோ பால் பந்துகள் அதிகமாக வீசப்பட்டு வருவது ரசிகர்களை கடுப்பேற்ற செய்துள்ளது, குறிப்பாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் “காகிஸோ ரபாடா மட்டும் 3 போட்டி முடிவதற்குள் 39 நோ பால்களை” வீசியுள்ள்ளார்.

- Advertisement -

நோ பால் ரபாடா:
பொதுவாக நோ பால்களை பவுலர்கள் வீசுவது என்பதே அரிதாகும் ஆனால் வழக்கத்தை விட சற்று அதிகப்படியான வேகத்துடன் பந்து வீச வேண்டும் என்ற காரணத்துக்காக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா இந்த தொடரில் வெள்ளை கோட்டில் சற்று அதிக தூரம் காலை பந்து வீசு முயல்வதால் அவருக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அதுவும் நியாயமே இல்லாமல் ஒரே ஓவரில் 2, 3 நோ பால் பந்துகளை வீசுவதால் அவ்வப்போது 8, 9 பந்துகளை கொண்ட ஓவர்களை அவர் வீசுவது வழக்கமாக இருந்து வருகிறது.

பிரீ ஹிட் கொடுங்க:
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நோ-பால் பந்துகளுக்கு பிரீ ஹிட் கொடுக்க வேண்டும் என தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் கூறியுள்ளார். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “நோ பால்களுக்கு பிரீ ஹிட் ! இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்…

- Advertisement -

இது நாம் பார்க்கும் 7, 8 முதல் 9 பந்துகள் அடங்கிய ஓவர்கள் கொண்ட நீண்ட ஸ்பெல்களை வீசுவதிலிருந்து பவுலர்களை காப்பற்ற உதவும் குறிப்பாக அவர்கள் பேட்டிங் செய்யும் போது. 6 பந்துகள் என்பது ஒரு உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பேட்டிங் பற்றி சரியாக தெரியாத டெயில் என்டர்களின் வாழ்க்கையை அச்சுறுத்த அதிகப்படியானதாகும்” என பதிவிட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி நேரத்தில் டெயில் என்டர்கள் அதாவது பவுலர்கள் பேட்டிங் செய்யும்போது ரபாடா போன்ற பவுலர்கள் மிகவும் அபாயகரமான பவுன்சர்களைக் கொண்டு அவர்களை தாக்குகிறார்கள், அப்படிப்பட்ட வேளையில் ஒரே ஓவரில் 2 – 3 நோ பால் கொண்ட பெரிய ஓவரை வீசினால் அவர்கள் எப்படி தாக்குப் பிடிப்பார்கள் எனவும் அதுபோன்ற சமயங்களில் அவர்களுக்கு காயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் சில சமயங்களில் காயம் ஏற்பட்டு அவர்கள் பந்துவீச முடியாமல் போவதாகவும் டேல் ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. போட்டிகளை எந்த சேனலில் பார்க்கலாம் – முழு விவரம் இதோ

இதை தடுக்க “பிரீ ஹிட்” விதிமுறையை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் கொண்டு வர வேண்டும் என அவர் புதிய ஆலோசனையை தெரிவித்துள்ளார், ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் “நோ பால் பந்துகளை வீசினால் பிரீ ஹிட்” என்ற விதி நிலுவையில் உள்ளதால் பவுலர்கள் எப்போதும் அந்த பந்துகளை வீச யோசிப்பார்கள் ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த விதிமுறை இல்லாத காரணத்தால் ரபாடா போன்ற பவுலர்கள் பயமே இல்லாமல் அசால்ட்டாக நோ பால்களை வீசுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement