உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. போட்டிகளை எந்த சேனலில் பார்க்கலாம் – முழு விவரம் இதோ

u-19
- Advertisement -

கிரிக்கெட்டின் இளம் ரத்தங்களான வருங்கால ஹீரோக்களை கண்டறியும் ஐசிசி அண்டர் 19 உலககோப்பை, 14வது முறையாக 2022 ஜனவரி 14ஆம் தேதி முதல் வெஸ்ட்இண்டீஸ் நாட்டில் கோலாகலமாக துவங்க உள்ளது. லீக் மற்றும் நாக் சுற்று உட்பட மொத்தம் 48 போட்டிகள் இந்த உலக கோப்பையில் நடைபெறுகின்றன. இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிலுள்ள ஆண்டிகுவா, கயானா, செயின்ட் கிட்ஸ், டிரினிடாட் ஆகிய 4 நகரங்களில் நடைபெற உள்ளது.

u 19

- Advertisement -

போட்டிகள் :
இந்த உலகக் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் பிப்ரவரி 5ஆம் தேதி சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பையில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், முன்னாள் சாம்பியன் இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்திய அணி:
இந்த உலக கோப்பையில் 2000, 2008, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்று இந்த உலக கோப்பையின் வெற்றிகரமான அணியாக விளங்கும் இந்தியா லீக் சுற்றில் “குரூப் பி” பிரிவில் இடம் பிடித்துள்ளது.

u-19

இந்த முறை டெல்லியை சேர்ந்த இந்திய வீரர் யாஷ் துள் தலைமையில் இந்த உலக கோப்பையில் இந்தியா விளையாட உள்ளது. அவர் தலைமையில் இந்த முறை சாம்பியன் பட்டம் வென்று 5வது முறையாக ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பையை வெல்லுமா என இந்திய ரசிகர்கள் இந்த உலக கோப்பைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்த தொடரில் பங்கேற்கும் 16 அணிகள்:
ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, கனடா, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, உகாண்டா, வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு நாடுகள்

u 19 1

அணி பிரிவுகள்:
குரூப் ஏ : வங்கதேசம், இங்கிலாந்து, கனடா, ஐக்கிய அரபு நாடுகள்.
குரூப் பி : இந்தியா, அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, உகாண்டா.
குரூப் சி : ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே
குரூப் டி : ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ்

- Advertisement -

இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள்:
யாஷ் துள் (கேப்டன்), எஸ்கே ரஷீத் (துணை கேப்டன்), சித்தார்த் யாதவ், நிஷாந்த் சிந்து, ஆராத்யா யாதவ் ஹனூர் சிங், ஆங்க்ரிஸ் ரகுவன்ஷி, அநீஸ்வர் கவுதம், தினேஷ் பானா, ராஜ் அங்கட் பாவா, மாணவ் பரக், வாசு வட்ஸ், விக்கி ஒஸ்த்வால், கௌஷல் தாம்பே, ஆர்எஸ் ஹங்காரகேகர், ரவிக்குமார், கர்வ் சங்வான். ரிசெர்வ் வீரர்கள் : அம்ரித் ராஜ் உபாத்யாய், அன்ஸ் கோஸை, ரிஷிட் ரெட்டி, உதய் சகரன்

u 19 ind 1

இந்த தொடரில் இந்தியா பங்குபெரும் லீக் சுற்றுப் போட்டிகள்:
ஜனவரி 15 : தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, கயானா.
ஜனவரி 19 : அயர்லாந்துக்கு எதிராக, டிரினிடாட்.
ஜனவரி 22 : உகாண்டாவுக்கு எதிராக, டிரினிடாட்.

இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இந்த தொடர் முழுவதையும் இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக நேரிடைய கண்டுகளிக்கலாம்.

Advertisement