தூக்கத்துல நீங்க என்னோட கனவுல வந்தீங்க, விராட் கோலியிடம் பேசியது பற்றி ஜாம்பவான் வாசிம் அக்ரம் – நெகிழ்ச்சி பேட்டி

Wasim Akram 3
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய முக்கியமான சூப்பர் 4 போட்டி நடைபெற்றது. இதே தொடரில் நடைபெற்ற லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் ரிசர்வ் நாள் கடைபிடிக்கப்படும் என்று ஆசிய கவுன்சில் ஏற்கனவே அறிவித்துள்ளது. அந்த நிலையில் இப்போட்டியில் வர்ணனை செய்வதற்காக ரவி சாஸ்திரி, வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் இரு நாடுகளைச் சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

அதை தொடர்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ந்த ஆரம்பக்கட்ட உரையாடலில் இருநாட்டு வீரர்களின் பற்றி முன்னாள் வீரர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி தம்முடைய கனவில் வந்ததாக வாசிம் அக்ரம் கூறியது இதர வர்ணையாளர்களை திரும்பி பார்க்க வைத்தது. மேலும் அதை போட்டி துவங்குவதற்கு முன்பாக நேரடியாக விராட் கோலியிடம் நேரடியாக சொன்னதாகவும் வாசிம் அக்ரம் கூறினார்.

- Advertisement -

கனவில் விராட் கோலி:
பொதுவாகவே அடிக்கடி பார்க்கும் நபர்களும் இடங்களும் தூங்கும் போது ஒருவரின் கனவில் வரும் என்று சொல்வார்கள். அந்த வகையில் விராட் கோலியை அடிக்கடி தொலைக்காட்சியில் பார்ப்பதால் தம்முடைய கனவில் வந்ததாக தெரிவித்த வாசிம் அக்ரம் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இன்று விராட் கோலியை கடந்து சென்ற போது நீங்கள் என்னுடைய கனவில் வந்தீர்கள் என்று நான் அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் என்ன சொல்கிறீர்கள்? வாசிம் பாய் என்று கேட்டார்”

“அப்போது உங்களை அடிக்கடி தொலைக்காட்சியில் பார்ப்பதால் நீங்கள் கனவில் வந்திருக்கலாம் என்று அவரிடம் சொன்னேன். ஏனெனில் விராட் கோலியை அடிக்கடி பார்ப்பதால் என்னுடைய மனதிலிருந்து என்னால் அகற்ற முடியவில்லை. மேலும் விராட், பாபர், ஷாகின் போன்ற வீரர்கள் மேட்ச் வின்னர்களாக இருக்கின்றனர். இது போன்ற வீரர்கள் தான் இந்தியா பாகிஸ்தான் போன்ற பெரிய போட்டியில் அசத்தக்கூடியவர்கள். அதில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள்”

- Advertisement -

“அத்துடன் விராட் – பாபர் ஆகியோரையும் தாண்டி நிறைய இளம் வீரர்கள் வெற்றிக்காக சிறப்பாக விளையாட தயாராக உள்ளனர். எனவே இந்த போட்டி எப்போதுமே வேடிக்கையானது. நேற்று கொழும்புவில் மழை பெய்தது” என்று கூறினார். அதை தொடர்ந்து துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 24.1 ஓவரில் 147/2 ரன்கள் எடுத்த போது மீண்டும் மழை வந்தது.

இதையும் படிங்க: வீடியோ : இது தான் ஒரிஜினல் ஃபார்ம் – கொஞ்சமும் மாறாத பாரம்பரிய பரிதாப சொதப்பலை அரங்கேற்றிய பாகிஸ்தான் வீரர்கள்

குறிப்பாக 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியான துவக்கம் கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்களும் சுப்மன் கில் 58 ரன்களும் எடுத்து கடந்த போட்டியில் அச்சுறுத்தலை கொடுத்த சாகின் அப்ரிடி போன்ற பவுலர்களுக்கு பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் இன்று தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் நாளை இந்த போட்டி மீண்டும் நின்ற இடத்திலிருந்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement