இதெல்லாம் உண்மையாவே ரொம்ப கஷ்டம்.. ஆனா கோலி கம்யூட்டர் மாதிரி ஈஸியாக்குறாரு.. வாட்சன் வியாபான பாராட்டு

Shane Watson
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளில் தொடர்ச்சியான 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தி வருகிறது. குறிப்பாக மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்துக்கு எதிராக 4 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 20 வருடங்கள் கழித்து ஐசிசி தொடரில் முதல் முறையாக வெற்றியை பதிவு செய்தது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து டார்ல் மிட்சேல் 130, ரச்சின் ரவீந்திரா 75 ரன்கள் எடுத்த உதவியுடன் 274 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 46, விராட் கோலி 95, ரவீந்திர ஜடேஜா 39* ரன்கள் எடுத்து 48 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

பாராட்டிய வாட்சன்:
அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா – கில் ஆகியோர் நல்ல துவக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்த பின் களமிறங்கிய விராட் கோலிக்கு எதிர்ப்புறம் ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல், சூரியகுமார் யாதவ் ஆகியோர் குறைந்த ரன்களில் அவுட்டாகி கைகொடுக்க தவறினார்கள். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதத்தை தவறவிட்டாலும் இந்தியாவை வெற்றி பெற வைத்து மீண்டும் தம்மை சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபித்தார்.

பொதுவாகவே இலக்கை துரத்தும் போது ஓரிரு விக்கெட்டுகளை இழந்தாலும் திடீரென ரன் ரேட்டும் அழுத்தமும் அதிகரித்து விடும் என்பதாலேயே சேசிங் செய்வது மிகவும் கடினமாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் விராட் கோலி கம்ப்யூட்டர் போல செயல்பட்டு மிகவும் கடினமான சேசிங்கை பார்ப்பதற்கு எளிதாக காட்டுவதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “சேசிங் செய்வது அவ்வளவு சுலபமானதல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆனால் அதை விராட் கோலி மிகவும் எளிதாக்குகிறார். குறிப்பாக நீண்ட காலம் அவர் அதை செய்வதால் பார்ப்பதற்கு எளிதாக தெரிகிறது. உண்மையிலேயே அது மிகவும் சவாலானது. ஏனெனில் நீங்கள் யாருடன் பேட்டிங் செய்ய வேண்டும், எந்த பந்துகளை அதிரடியாக எதிர்கொள்ள வேண்டும், எந்த சமயத்தில் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை கணக்கிட்டு விளையாட வேண்டும்”

இதையும் படிங்க: விராட் கோலியை இந்த விஷயத்துல அடிச்சிக்க ஆளே இல்ல. அவரு வேறலெவல்ங்க – கவுதம் கம்பீர் பாராட்டு

“இருப்பினும் விராட் கோலிக்குள் கம்ப்யூட்டர் இருக்கிறது. அது எந்த நேரத்தில் எதை சரியாக செய்ய வேண்டும் என்பதை சிறப்பாக செய்கிறது. ஏனெனில் சேசிங் செய்வது பார்க்கில் நடப்பது போல் எளிதானதல்ல. உலகக்கோப்பை போட்டியில் தோற்காத அணிக்கு எதிராக நல்ல ஃபார்ம் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவை அவருக்கு சரியானவற்றை செய்தது. அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது” என்று கூறினார்.

Advertisement