விராட் கோலியை இந்த விஷயத்துல அடிச்சிக்க ஆளே இல்ல. அவரு வேறலெவல்ங்க – கவுதம் கம்பீர் பாராட்டு

Gambhir-and-Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரரான விராட் கோலி இந்த 2023-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பான பார்மை வெளிப்படுத்தி அட்டகாசமான ஆட்டத்தை விளையாடி வருகிறார். குறிப்பாக இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வரும் இந்த நடப்பு 2023-ஆம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடரிலும் இதுவரை விராட் கோலியின் ஆட்டம் பிரமாதமாக உள்ளது.

- Advertisement -

எனவே நிச்சயம் இந்திய அணி இம்முறை சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளுக்கான உலககோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்ல விராட் கோலி உறுதுணையாக இருப்பார் என்று பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

அந்த வகையிலேயே இதுவரை நடைபெற்று முடிந்த ஐந்து லீக் போட்டிகளின் முடிவில் விராட் கோலி ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதம் என 118 ரன்கள் சராசரியுடன் 354 ரன்கள் குவித்து அசத்தி வருகிறார். அதோடு நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது கூட 274 ரன்கள் என்கிற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தூணாக நின்ற விராட் கோலி 95 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றியின் அருகில் கொண்டு வந்து நிறுத்தி ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அவரது இந்த பிரமாதமான இன்னிங்சிற்கு பிறகு பல்வேறு தரப்பிலும் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது, அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் விராட் கோலியின் இந்த அற்புதமான இன்னிங்ஸ் குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி போன்ற ஒரு பெஸ்ட் ஃபினிஷர் யாருமே கிடையாது.

இதையும் படிங்க : இப்போ தான் இதையே பண்றாங்களா.. 1167 பந்துகள் கழித்து ஒரு வழியாக கிண்டலை நிறுத்திய பாகிஸ்தான்

ஏனெனில் ஐந்தாவது இடத்தில் அல்லது ஏழாவது இடத்தில் இறங்கி போட்டியை முடித்து கொடுப்பவர்கள் தான் பினிஷர் என்று கிடையாது. எந்த இடத்தில் இறங்கினாலும் அணியை கடைசிவரை வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் அவரே பினிஷர். அந்த வகையில் விராட் கோலி ஒரு சேஸ் மாஸ்டர் என கவுதம் கம்பீர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement