இப்போ தான் இதையே பண்றாங்களா.. 1167 பந்துகள் கழித்து ஒரு வழியாக கிண்டலை நிறுத்திய பாகிஸ்தான்

PAK vs AFg
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 23ஆம் தேதி மதியம் 2:00 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 22வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் கடந்த இரண்டு போட்டிகளில் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

மறுபுறம் கடந்த போட்டியில் தோல்வியை சந்தித்து ஆப்கானிஸ்தானும் தங்களுக்கு மிகவும் பிடித்த சுழலுக்கு சாதகமான சென்னை மைதானத்தில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கியது. அதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய பாகிஸ்தானுக்கு அப்துல்லா சபிக் இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக பவர் பிளே ஓவர்களில் சிக்ஸர் அடித்து மோசமான கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

- Advertisement -

1167 பந்துகள் கழித்து:
அதாவது இந்த உலக கோப்பையில் தங்களுடைய முதல் 4 போட்டிகளில் எந்த பாகிஸ்தான் வீரர்களும் பவர் பிளே ஓவர்களில் ஒரு சிக்சர்கள் கூட அடிக்கவில்லை. அதனால் கிண்டல்களை சந்தித்த அந்த அணி ஒரு வழியாக இந்த உலகக் கோப்பையில் 1167 பந்துகள் கழித்து முதல் முறையாக இந்த போட்டியில் பவர்பிளே ஓவரில் சிக்ஸர் அடித்து விமர்சனங்களை நிறுத்தியது. அந்த வகையில் 10 ஓவர்கள் வரை அவருடன் நிலைத்து நின்று 51 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இமாம்-உல்-ஹக் 17 ரன்களில் அவுட்டானார்.

அந்த நிலைமையில் வந்த கேப்டன் பாபர் அசாம் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் சிறப்பாக செயல்பட்டு அரை சதம் கடந்த அப்துல்லா ஷபிக்கை 58 ரன்களில் அவுட்டாக்கிய நூர் அகமது அடுத்ததாக வந்த முகமது ரிஸ்வானை 8 ரன்களில் பெவிலியன் அனுப்பி வைத்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய பாபர் அசாம் அரை சதம் கடந்து சவாலை கொடுத்த நிலையில் எதிர்புறம் சவுத் ஷாக்கில் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அடுத்த சில ஓவர்களிலேயே சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாமும் 74 ரன்களில் அவுட்டாகி சென்றார். இறுதியில் ஓவர்களில் ஆப்கானிஸ்தானை அதிரடியாக எதிர்கொண்ட இப்திகார் அகமது 2 பவுண்டரி 4 சிக்சர்கள் 40 (27) ரன்கள் எடுத்து அசத்தினார். அவருடன் நிதானமாக விளையாடிய துணை கேப்டன் சடாப் கான் 40 ரன்கள் எடுத்ததால் 50 ஓவர்களில் பாகிஸ்தான் 282/7 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க: நியூசிலாந்து அணிக்கெதிராக விராட் கோலி ஆடியதை பார்த்து அவருக்கு புது பெயரை வைத்த – அனுஷ்கா சர்மா

மறுபுறம் ஆரம்பத்தில் அசத்திய போதிலும் கடைசி நேரத்தில் ரன்களை வழங்கி ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 3, நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்த நிலைமையில் சேப்பாக்கம் மைதானம் பேட்டிங்க்கு சவாலாக இருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு போராடி வருகிறது.

Advertisement