நியூசிலாந்து அணிக்கெதிராக விராட் கோலி ஆடியதை பார்த்து அவருக்கு புது பெயரை வைத்த – அனுஷ்கா சர்மா

Anushka-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியானது நேற்று தர்மசாலா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது நான்கு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.

இதன் மூலம் தற்போது இந்த உலககோப்பை தொடருக்கான புள்ளி பட்டியலிலும் இந்திய அணி நியூசிலாந்து அணியை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதலிடத்திற்கும் முன்னேறியுள்ளது. மேலும் அரையிறுதிக்கான வாய்ப்பையும் இந்த வெற்றியின் மூலம் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது.

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் நியூசிலாந்து அணி முதலில் விளையாடியது. அப்படி விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்களை குவித்தது.

பின்னர் 274 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 274 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 104 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 95 ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டம் இழந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு அனைவரது மத்தியில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதையும் படிங்க : 77 வயதில் இயற்கை எய்திய முன்னாள் இந்திய ஜாம்பவான் ஸ்பின்னர் மற்றும் கேப்டன்.. ரசிகர்கள் சோகம்

இவ்வேளையில் விராட் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா விராட் கோலியின் இந்த ஸ்பெஷல் இன்னிங்க்ஸை பாராட்டி அவருக்கு செல்ல பெயரிட்டு ஒரு பதிவு ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் பகிர்ந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள அனுஷ்கா சர்மா “ஸ்டார்ம் சேசர்” (புயல் மாதிரி சேசிங் செய்பவர்) என்று அவருக்கு செல்ல பெயரிட்டு அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement