77 வயதில் இயற்கை எய்திய முன்னாள் இந்திய ஜாம்பவான் ஸ்பின்னர் மற்றும் கேப்டன்.. ரசிகர்கள் சோகம்

Bishan Singh Bedi
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் பிஷன் சிங் பேடி அக்டோபர் 23ஆம் இயற்கை எய்தியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 1946ஆம் ஆண்டு பிறந்த அவர் உள்ளூர் போட்டிகளில் சுழல் பந்து வீச்சாளராக சிறப்பாக விளையாடி கடந்த 1966ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியாவுக்காக அறிமுகமானார்.

அந்த வாய்ப்பில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஒரு கட்டத்தில் முதன்மை வீரராக உருவெடுத்த அவர் எரபள்ளி பிரசன்னா, பிஎஸ் சந்திரசேகர், சீனிவாசன் வெங்கட்ராகவன் ஆகியோருடன் சேர்ந்து 70களில் எதிரணிகளுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்த இந்திய அணியின் ஸ்பின்னர்களில் ஒருவராக இருந்தார். குறிப்பாக 1975 உலகக் கோப்பையில் ஈஸ்ட் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 12 ஓவர்களில் 8 மெய்டன் வீசிய அவர் வெறும் 6 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது.

- Advertisement -

ரசிகர்கள் சோகம்:
அதே போல 1966 முதல் 1979 வரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 266 விக்கெட்டுகளை எடுத்து அந்த காலகட்டங்களில் இந்தியா பதிவு செய்த வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். மேலும் 10 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள அவர் 7 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

அத்துடன் 1970ஆம் ஆண்டு கால கட்டங்களில் 27 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் கேப்டனாகவும் அவர் செயல்பட்டுள்ளார். குறிப்பாக 1976ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற போட்டியில் அவரது தலைமையில் வெற்றி கண்ட இந்தியா அதே வேகத்தில் நியூசிலாந்து மண்ணிலும் 2 – 0 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடியது.

- Advertisement -

அத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் டெல்லி அணியின் கேப்டனாகவும் செயல்பட்ட அவர் 1978/79, 1980/81 ஆகிய அடுத்தடுத்த ரஞ்சிக் கோப்பைகளை வென்று சாதனை படைத்தார். மேலும் இங்கிலாந்தின் கவுண்டி தொடரிலும் நார்த்தம்டன்ஷைர் அணிக்காக 102 போட்டிகளில் விளையாடிய அவர் 434 விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்து மண்ணில் தன்னுடைய திறமைகளை நிரூபித்தார்.

இதையும் படிங்க: அவர் பெஃராரி கார் மாதிரி.. சரியா யூஸ் பண்றது நம்ம வேலை.. இர்பான் பதான் பாராட்டு

அத்துடன் ஓய்வுக்கு பின் 1990 காலகட்டங்களில் இந்திய அணியின் மேனேஜராகவும் செயல்பட்ட அவர் நாளடைவில் தேர்வுக்குழு தலைவராகவும் செயல்பட்டார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக போற்றப்படும் அவர் சமீப வருடங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்று 77 வயதில் இயற்கை எய்தினார். அதனால் சச்சின் டெண்டுல்கர் உட்பட அனைத்து முன்னாள், இந்நாள் இந்திய வீரர்களும் ரசிகர்களும் சோகமடைந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement