அவர் பெஃராரி கார் மாதிரி.. சரியா யூஸ் பண்றது நம்ம வேலை.. இர்பான் பதான் பாராட்டு

Irfan Pathan 3
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. தரம்சாலா நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டார்ல் மிட்சேல் 130, சச்சின் ரவீந்தரா 75 ரன்கள் எடுத்த உதவியுடன் நியூசிலாந்து 274 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 46, விராட் கோலி 95, ரவீந்திர ஜடேஜா 39* ரன்கள் எடுத்து 48 ஓவரிலேயே வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இதன் வாயிலாக ஐசிசி தொடரில் 20 வருடங்கள் கழித்து முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா 5 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்தது.

- Advertisement -

பெஃராரி கார்:
முன்னதாக இப்போட்டியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயத்தால் வெளியேறியதால் இந்தியாவால் வெல்ல முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற முகமது ஷமி 5 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக 243/4 என்ற நல்ல நிலையில் இருந்த நியூசிலாந்தை 274 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய முக்கிய பங்காற்றிய அவர் தம்மை சாம்பியன் பவுலர் என்பதை நிரூபித்தார்.

அதிலும் குறிப்பாக இத்தொடரில் முதல் 4 போட்டிகளில் வாய்ப்பு பெறாமல் பெஞ்சில் அமர்ந்து வந்த அவர் இப்போட்டியில் கிடைத்த வாய்ப்பை பொன்னாக மாற்றி உலகக் கோப்பை வரலாற்றில் 2 முறை 5 விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் என்ற மாபெரும் சாதனையும் படைத்தார். அது போக உலகக்கோப்பையில் வெறும் 12 இன்னிங்ஸில் 32 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் மற்ற இந்திய பவுலர்களை காட்டிலும் அதிக விக்கெட்டுகளை குறைந்த சராசரியில் எடுத்து தன்னுடைய தரத்தை காட்டியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் கிடங்கிலிருந்து வெளியே எடுத்து ஓட்டினாலும் அட்டகாசமாக ஓடும் விலை உயர்ந்த ஃபெராரி காரை போல எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் முகமது ஷமி கொஞ்சமும் தேக்கமின்றி அதே வேகத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய திறமையை கொண்டிருப்பதாக இர்பான் பதான் மனதார பாராட்டியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

Irfan Pathan Tweet 2

“முகமது ஷமி ஃபெராரி காரை போன்றவர். நீங்கள் அதை கேரேஜிலிருந்து வெளியே எடுத்து ஓட்டும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் சவாரி செய்வதில் ஒரே மாதிரியான வேகத்தையும் சிலிர்ப்பையும் மகிழ்ச்சியையும் தரும்” என்று வித்தியாசமாக பாராட்டியுள்ளார். இந்த நிலைமையில் இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்ள தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement