IND vs WI : ஒருநாள் தொடரில் மாபெரும் சாதனையை செய்ய காத்திருக்கும் விராட் கோலி – சச்சினை ஓரங்கட்ட வாய்ப்பு

Kohli-and-Sachin
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து அந்த அணிக்கு (வெஸ்ட் இண்டீஸ்) எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

Virat Kohli 1

- Advertisement -

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கும் இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்க காத்திருக்கிறார்.

அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் 321 இன்னிங்ஸ்களில் விளையாடி 13,000 ஒருநாள் ரன்களை பூர்த்தி செய்து இருந்தார். அதேவேளையில் தற்போது விராட் கோலி 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் 265 இன்னிங்ஸ்களிலேயே 12898 ரன்களை குவித்துள்ளார்.

எனவே அவருக்கு 13,000 ஒருநாள் ரன்களை பூர்த்தி செய்ய இன்னும் 102 ரன்கள் மட்டுமே தேவை. இந்த தொடரில் மூன்று போட்டிகள் நடைபெற இருப்பதினால் நிச்சயம் அவர் 13,000 ரன்களை இந்த தொடரிலேயே குவித்து விடுவார் என்பது உறுதி. அதோடு அவர் இந்த சாதனையை முதல் போட்டியிலே அல்லது கடைசி போட்டியிலையோ நிகழ்த்த வாய்ப்புள்ளது.

- Advertisement -

இதனால் நிச்சயம் விராட் கோலியால் (266-268) இன்னிங்ஸ்களில் 13,000 ரன்களை தொட முடியும். அப்படி தொட்டால் சச்சினை விட 50 இன்னிங்ஸ்கள் வித்தியாசத்தில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் வேகமாக 13,000 ஒருநாள் ரன்களை அடித்த வீரராக சாதனை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs WI : இந்தியா மற்றும் வெ.இ ஒருநாள் தொடரை எந்த சேனலில் காணலாம்? – எத்தனை மணிக்கு போட்டிகள் துவங்கும்?

இந்திய அணிக்காக கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகமான விராட் கோலி இதுவரை 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12,898 ரன்களை குவித்துள்ளார். அதில் 46 சதங்களும், 65 அரைசதங்களும் அடங்கும்.

Advertisement