IND vs WI : இந்தியா மற்றும் வெ.இ ஒருநாள் தொடரை எந்த சேனலில் காணலாம்? – எத்தனை மணிக்கு போட்டிகள் துவங்கும்?

IND-vs-WI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று முடிந்தது. அதை தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை ஜூலை 27-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. இந்த ஒருநாள் தொடரரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

IND-vs-WI-1

- Advertisement -

ஏற்கனவே நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக இந்த ஒருநாள் தொடரையும் கைப்பற்ற ஆயத்தமாகி வருகிறது.

மேலும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற இருப்பதினால் இனிவரும் ஒவ்வொரு ஒருநாள் தொடரும் இந்திய அணிக்கு முக்கியமானவை என்பதினால் இந்த ஒருநாள் தொடரில் வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

DD Sports

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரானது இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? போட்டிகளை எந்த தொலைக்காட்சியில் பார்க்கலாம்? என்பது குறித்த தெளிவான தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம்.

- Advertisement -

அதன்படி முதலாவது ஒருநாள் போட்டியானது பார்படாஸ் நகரில் ஜூலை 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை 29-ஆம் தேதி அதே பார்படாஸ் நகரில் நடைபெறவுள்ளது. மேலும் மூன்றாவது ஒருநாள் போட்டி டிரினிடாட் நகரில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்துமே இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சொந்த மண்ணிலாவது இந்தியா 2023 உ.கோ ஜெயிக்குமா? ரசிகர்களின் ஏக்கதுக்கு ஜாம்பவான் கபில் தேவ் கொடுத்த பதில் இதோ

அதோடு இந்த ஒருநாள் தொடரை டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இலவசமாக கண்டு களிக்கலாம். மேலும் ஆன்லைன் மூலம் கண்டுபிடிக்க விரும்புவோர் ஃபேன்கோடு மற்றும் ஜியோ சினிமாஸ் ஆகிய செயலிகள் மூலம் இந்த தொடரை நேரடியாக கண்டு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement