ரோஹித், ரசல் மாதிரி சிக்ஸர் அடிக்க முடியாதுன்னு நினைக்காதீங்க, அவர் அதுக்கும் மேல – இந்திய வீரரை பாராட்டிய கர்ட்லி ஆம்ப்ரோஸ்

Curtly Ambrose 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு முதலில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்று அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடிய 4வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற விராட் கோலி உலகிலேயே தன்னுடைய 500வது போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார். 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

Sachin-and-Kohli

- Advertisement -

குறிப்பாக ஜாம்பவான் சச்சின் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் அவரது இடத்தில் அவரைப்போலவே ரன் மெசினாக பெரும்பாலான போட்டிகளில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக நின்று அனைத்து டாப் பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு வரும் விராட் கோலி 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களையும் அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். அதனால் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக போற்றப்படும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான ஆசிய கேப்டன் என்ற சாதனையையும் இந்த உலகிற்கே ஃபிட்னஸ் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகவும் இருக்கிறார் என்றே சொல்லலாம்.

ஆம்ப்ரோஸ் பாராட்டு:
அப்படி நிறைய பெருமைகளைக் கொண்ட விராட் கோலியின் பேட்டிங் டெக்னிக் கிட்டத்தட்ட சச்சின் போலவே மிகவும் நேர்த்தியானது என்று சொல்லலாம். அதாவது இந்த நவீன கிரிக்கெட்டில் ரோகித் சர்மா போன்றவர்கள் சிக்ஸர்களால் விரைவாக ரன்களைக் குவிக்கும் டெக்னிக்கை பயன்படுத்தும் நிலையில் ரசல், பொல்லார்ட் போன்றவர்கள் காட்டுத்தனமாக பேட்டை சுழற்றி வெறித்தனமான சிக்ஸர்களை அடித்து ரன்களை சேர்ப்பார்கள். ஆனால் பெரும்பாலான சமயங்களில் தரையோடு தரையாக ஃபீல்டர்கள் நிற்கும் இடைவெளியை பார்த்து பவுண்டரிகளை அடிக்கும் விராட் கோலி பிட்ச் கடினமாக இருந்தாலும் ஃபிட்னஸ் பயன்படுத்தி சிங்கிள், டபுள் எடுத்தே வெற்றி பெற வைக்கும் ஸ்டைலை கொண்டவர்.

Rohit Sharma Virat kohli

சொல்லப்போனால் அந்த டெக்னிக்கை பயன்படுத்தியே ரோகித் சர்மா போன்றவர்களை விட தற்சமயத்தில் உலக அளவில் அதிக ரன்கள் அடித்த வீரராக விராட் கோலி ஜொலித்து வருகிறார். அதே போல காட்டுதனமாக அடிக்காமலேயே ரசல் போன்றவர்களை விட 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக பெற்றுக் கொடுத்த மகத்தான வெற்றியைப் போல ஃபினிஷிங் செய்வதிலும் விராட் கோலி தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.

- Advertisement -

அந்த வகையில் ரோஹித் சர்மா, ரசல் போன்ற பவர் ஹிட்டர்களை போல சிக்ஸர்கள் அடிக்காமலேயே அதற்கு நிகரான ரன்களை குவிக்கும் திறமை விராட் கோலியிடம் இருப்பதாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் கர்ட்லி ஆம்ப்ரோஸ் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “கேப்டன் ரோஹித் சர்மா அற்புதமான வீரர். தேவைப்படும் போது அதிரடியாக விளையாட கூடியவர். மறுபுறம் பார்க்கும் கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துவது போல் எளிமையாக விளையாடக்கூடிய விராட் கோலி அதிரடியாக செயல்படாமலேயே விரைவாக ரன்களை குவிக்கும் திறமை கொண்டவர்”

Curtly Ambrose

“குறிப்பாக அவர் சிக்ஸர்களை பறக்க விடும் பவர் ஹிட்டர் கிடையாது. அதற்காக சிக்ஸர்களை விளாசும் பவர் ஹிட்டர்கள் அடிக்கும் ரன்களை அவரால் அடிக்க முடியாது என்று அர்த்தம் கிடையாது. அதிரடியாக விளையாடும் வீரர்களுக்கு நிகராக அவராலும் விரைவாக ரன்களை குவிக்க முடியும். அந்த வகையில் மிகச் சிறந்த வீரரான அவர் பார்ப்பதற்கு அழகாக பேட்டிங் செய்யக் கூடியவர். கடந்த பல வருடங்களாக அவரைப் பார்த்து நானும் ரசித்து வருகிறேன்”

இதையும் படிங்க:50 ஓவர் உலககோப்பைக்கு ரெடியாக தான் நான் இதெல்லாம் பண்றேன் – தோல்விக்கு பிறகு பேசிய ஹார்டிக் பாண்டியா

“இந்த சுற்றுப்பயணத்தில் அவர் வெளிநாட்டு மண்ணில் சதமடித்தது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இருப்பினும் அது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வந்தது துரதிஷ்டவசம் என்றால் அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் அது அவருடைய தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். இன்னும் விளையாடி சாதிப்பதற்கு அவரிடம் நிறைய இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement