50 ஓவர் உலககோப்பைக்கு ரெடியாக தான் நான் இதெல்லாம் பண்றேன் – தோல்விக்கு பிறகு பேசிய ஹார்டிக் பாண்டியா

Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இந்து தொடரில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் நேற்று ஜூலை 29-ஆம் தேதி பார்ப்பதாஸ் நகரில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

Shai-Hope

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரை அவர்களுடன் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தது.

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 40.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 182 ரன்கள் குவித்து 6 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Hardik-Pandya

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு பேசிய ஹார்டிக் பாண்டியா இந்த தொடரில் தான் தொடர்ச்சியாக பந்துவீசி வருவது குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார். அந்த வகையில் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் :

- Advertisement -

நான் இந்த தொடரில் அதிகமான ஓவர்களை விரும்பியே வீசி வருகிறேன். ஏனெனில் எதிர்வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்காக நான் தயாராகி வரும் வேளையில் இது போன்ற தொடர்களில் நான் அதிக ஓவர்களை வீசி என்னுடைய செயல்திறனை நானே சோதித்துப் பார்க்கிறேன் என ஹார்டிக் பாண்டியா கூறினார்.

இதையும் படிங்க : நான் இன்னைக்கு இவ்ளோ பெரியாளா வரத்துக்கு காரணமே யுவ்ராஜ் சிங் தான் – ஸ்டுவர்ட் ப்ராட் நெகிழ்ச்சி பேட்டி

கடந்த போட்டியிலும் சரி, இந்த போட்டியிலும் சரி ஹார்டிக் பாண்டியாவே போட்டியின் முதல் ஓவரை வீசி இன்னிங்க்ஸை துவக்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த இரண்டாவது போட்டியிலும் ஹார்டிக் பாண்டியா 6.4 ஓவர்களை வீசி 38 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement