IND vs BAN : ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கரை மிஞ்சிய கிங் கோலி – 2 புதிய வரலாற்று சாதனைகளை படைத்து அசத்தல்

Virat Kohli
- Advertisement -

2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் வங்கதேசத்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. அதனால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான இந்திய அணி நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெற்ற கடைசி சம்பிரதாய போட்டியில் கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கியது. சட்டக்ரோம் நகரில் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சிகர் தவான் வழக்கம் போல தடவலாக செயல்பட்டு 3 (8) ரன்களில் அவுட்டானார்.

ஆனால் கேப்டன் ரோகித் சர்மா காயமடைந்ததால் நீண்ட நாட்களுக்கு பின் வாய்ப்பு பெற்ற இசான் கிசான் அடுத்து களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் ரன்களை சேர்த்தார். அதில் ஒருபுறம் விராட் கோலி கம்பெனி கொடுக்கும் வகையில் பொறுமையாக பேட்டிங் செய்ய மறுபுறம் வெளுத்து வாங்கிய இஷான் கிசான் எரிமலையாக செயல்பட்டு 24 பவுண்டரி 10 சிக்ஸருடன் இரட்டை சதமடித்து 210 (131) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

கிங் கோலி:
குறிப்பாக 2வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் 290 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையையும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையையும் தகர்த்து 2 புதிய உலக சாதனைகளை படைத்தார். அவருக்கு பின் வந்த ஷ்ரேயஸ் ஐயர் 3, கேப்டன் கேஎல் ராகுல் 8 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் மறுபடியும் நங்கூரமாக நின்று அட்டகாசமாக செயல்பட்ட விராட் கோலி தனது பங்கிற்கு சதமடித்து 11 பவுண்டரி 2 சிக்ஸருடன் 113 (91) ரன்கள் ஆட்டமிழந்தார்.

இறுதியில் வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களும் அக்சர் பட்டேல் 20 ரன்களும் எடுத்ததால் 50 ஓவர்களில் 409/8 ரன்கள் குவித்த இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக தன்னுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்தது. இப்போட்டியில் இஷான் கிசான் ஏராளமான சாதனைகளை படைத்தாலும் அவருக்கு உறுதுணையாக நின்று க்ளாஸ் இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 44வது சதத்தையும் சர்வதேச கிரிக்கெட்டில் 72வது சதத்தையும் விளாசினார்.

- Advertisement -

அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த 2வது வீரர் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்த அவர் புதிய உலக சாதனை படைத்து சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக உள்ளார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 100
2. விராட் கோலி : 72*
3. ரிக்கி பாண்டிங் : 71
4. குமார் சங்ககாரா : 63
5. ஜாக் காலிஸ் : 62

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 44வது சதத்தை அடித்த அவர் அதிவேகமாக 44 சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 256 இன்னிங்ஸ்
2. சச்சின் டெண்டுல்கர் : 418 இன்னிங்ஸ்

இதையும் படிங்க: எரிமலையாய் வெடித்த இஷான் கிசான் – சேவாக், கங்குலி போன்ற ஜாம்பவான்களை மிஞ்சி படைத்த 9 புதிய சாதனைகளின் பட்டியல்

அத்துடன் வங்கதேசத்துக்கு எதிராக அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்து புதிய வரலாற்று சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 1317* ரன்கள்
2. சச்சின் டெண்டுல்கர் : 1316 ரன்கள்
3. ரோஹித் சர்மா : 1225 ரன்கள்

Advertisement