இந்தியாவின் மேட்ச் வின்னராக தோனியின் ஆல் டைம் சாதனையை உடைத்த கிங் கோலி – சச்சினை முந்த பிரகாச வாய்ப்பு

Virat Kohli Sachin tendulkar MS Dhoni
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா விளையாடி வருகிறது. ஜூலை 12ஆம் தேதி டாமினிகா நகரில் துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா எதிர்பார்த்தது போலவே ஆரம்பம் முதலே மிகச் சிறப்பாக செயல்பட்டு பலவீனமான வெஸ்ட் இண்டீஸை இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கி புள்ளி பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளது.

Kohli

- Advertisement -

அந்த போட்டியில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற ஜெய்ஸ்வால் அட்டகாசமான சதமடித்து 171 ரன்கள் குவித்து ஏராளமான சாதனைகளை படைத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். அதே போல மொத்தமாக 12 விக்கெட்டுகளை சாய்த்த ரவிச்சந்திரன் அஸ்வின் என்னை ஏன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தேர்வு செய்யவில்லை என்று இந்திய அணி நிர்வாகத்திற்கு பதிலடி கொடுத்து வெற்றியில் பங்காற்றினார். அவர்களுக்கு நிகராக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி வழக்கத்திற்கு மாறாக மிகவும் மெதுவாக விளையாடி 76 ரன்கள் எடுத்து வெற்றியில் தன்னுடைய பங்காற்றினார்.

புதிய சாதனை:
கடந்த 2008 அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே கேப்டன் எம்எஸ் தோனியின் ஆதரவுடன் நிலையான இடம் பிடித்து நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். குறிப்பாக ஜாம்பவான் சச்சினின் ஓய்வுக்கு பின் 2013 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் அனைத்து டாப் பவுலவர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களையும் அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் நவீன கிரிக்கெட்டின் நாயகனாகவும் பேட்டிங் துறையின் முதுகெலும்பாகவும் செயல்பட்டு வருகிறார்.

Kohli dhoni

அந்த வகையில் நிறைய சாதனைகளையும் படைத்துள்ள அவர் இந்த போட்டியில் பெற்ற வெற்றியையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா பதிவு செய்த 296 வெற்றிகளில் ஒரு அங்கமாக இருந்துள்ளார். அதாவது அறிமுகமான 2008 முதல் இதுவரை டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 296 இந்தியா வெற்றி பெற்ற போட்டிகளில் ஒரு அங்கமாக விராட் கோலி விளையாடி பங்காற்றியுள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா பதிவு செய்த அதிக வெற்றிகளில் அங்கமாக இருந்த 2வது வீரர் என்ற எம்எஸ் தோனியின் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2004 – 2019 வரையிலான காலகட்டங்களில் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் ஃபினிஷராகவும் செயல்பட்டு கேப்டனாகவும் 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்த தோனி மொத்தம் இந்தியா பதிவு செய்த 295 வெற்றி பெற்ற போட்டிகளில் ஒரு அங்கமாக இருந்துள்ளார்.

Sachin Virat Kohli

இருப்பினும் தற்போது தம்முடைய குருவான தோனியை 3வது இடத்திற்கு தள்ளி விராட் கோலி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் சந்தேகமின்றி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 1989 – 2013 வரையிலான காலகட்டங்களில் இந்தியா வெற்றி பெற்ற 307 போட்டிகளில் ஒரு அங்கமாக இருந்து அந்த மாபெரும் சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

இதையும் படிங்க:சின்ன வயசுல பாஸ்ட் பவுலரா இருந்த நான் லெக் ஸ்பின்னரா மாற காரணமே இவர்தான் – மனம்திறந்த யுஸ்வேந்திர சாஹல்

ஆனால் தற்போது 34 வயது மட்டுமே நிரம்பியுள்ள விராட் கோலி குறைந்தது 3 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிலைமையில் இன்னும் அவர் 12 வெற்றியில் இடம் பெறும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா பதிவு செய்த அதிக வெற்றிகளில் அங்கமாக இருந்த வீரர் என்ற சச்சின் ஆல் டைம் சாதனையை முறியடித்து மற்றுமொரு புதிய வரலாற்று சாதனை படைப்பதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement