
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரமான விராட் கோலி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது 91 பந்துகளை சந்தித்து 93 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியதோடு சேர்த்து அந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார். அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்கையில் :
மூன்றாவது வீரராக களமிறங்கிய அவர் 29 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஏற்கனவே கடந்த முதலாவது ஒருநாள் போட்டியின் போது சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 28000 ரன்களை பூர்த்தி செய்து சாதனை நிகழ்த்திய விராட் கோலி இன்றைய ஆட்டத்தின் மூலம் மேலும் ஒரு சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.
அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தினை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இன்று அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இன்றைய நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவர் முதல் பவுண்டரி அடித்ததும் :
நியூசிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக முதலிடத்தில் இருந்த சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி அவர் சாதனை நிகழ்த்தியுள்ளார். நியூசிலாந்து அணிக்கெதிராக மட்டும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 1750 ரன்கள் அடித்திருந்தார். அதுவே இந்திய வீரர் ஒருவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.
இவ்வேளையில் இன்றைய போட்டியில் அடித்த ரன்களின் மூலம் விராட் கோலி 1751+ ரன்களுடன் நியூசிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் ஒட்டுமட்டமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் 1971 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க : சதம் அடித்ததும் வித்தியாசமாக கொண்டாடிய கே.எல் ராகுல்.. எதற்காக இந்த கொண்டாட்டம் தெரியுமா? – விவரம் இதோ
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்களை குவித்தது. பின்னர் 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது நியூசிலாந்து அணியானது விளையாடி வருகிறது.