சதம் அடித்ததும் வித்தியாசமாக கொண்டாடிய கே.எல் ராகுல்.. எதற்காக இந்த கொண்டாட்டம் தெரியுமா? – விவரம் இதோ

KL Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று ஜனவரி 14-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட :

சதத்தை வித்தியாசமாக கொண்டாடிய கே.எல் ராகுல் :

50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 284 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக இந்த போட்டியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் 112 ரன்களையும், கேப்டன் சுப்மன் கில் 56 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது நியூசிலாந்து அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது தனது எட்டாவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்த கே.எல் ராகுல் வித்தியாசமாக அந்த சதத்தை கொண்டாடியது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது இந்த போட்டியில் சதம் அடித்த பிறகு தனது இடது கை விரல்களை வாயில் வைத்து அவர் இந்த சதத்தை கொண்டாடியிருந்தார். இப்படி அவர் சதத்தை வித்தியாசமாக கொண்டாடுவது இது புதிது கிடையாது. ஏற்கனவே கடைசியாக அவர் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த போதும் இதே கொண்டாட்டத்தில் தான் ஈடுபட்டார். இதற்கு காரணம் யாதெனில் :

- Advertisement -

அவருக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்திருந்தது. அவரது மகளுக்காக இந்த சதத்தை அர்ப்பணிப்பதாகவே அவர் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது இதே வகையிலான கொண்டாட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 1773 ரன்ஸ்.. சச்சினின் சாதனையை உடைத்த கிங் கோலி.. நியூஸிக்கு எதிராக புதிய ஆல் டைம் சாதனை

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த இரண்டாவது போட்டியில் 92 பந்துகளை சந்தித்த அவர் 11 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என இறுதிவரை ஆட்டமிழக்காமல் 112 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement