பஞ்சாப் 176 ரன்ஸ்.. ஃபீல்டிங்கில் அசத்திய கிங் கோலி.. ரெய்னாவின் வாழ்நாள் சாதனையை உடைத்து புதிய சாதனை

Kohli and Raina
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 25ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் 6வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அதில் கடந்த போட்டியில் தோல்வியை சந்தித்த பெங்களூரு வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்புடன் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு கேப்டன் ஷிகர் தவான் நிதானமாக விளையாடிய நிலையில் ஜானி பேர்ஸ்டோ 8 ரன்களில் முகமது சிராஜ் வேகத்தில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த பிரப்சிம்ரன் சிங் இரண்டாவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் 25 (17) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

விராட் கோலியின் சாதனை:
அடுத்த சில ஓவர்களிலேயே அதற்கடுத்ததாக வந்த லியம் லிவிங்ஸ்டன் 17 (13) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அதே போல மறுபுறம் தடுமாறிய கேப்டன் ஷிகர் தவானும் கடைசி வரை அதிரடியாக விளையாட முடியாமல் மேக்ஸ்வெல் சுழலில் 45 (37) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இறுதியில் ஷாம் கரண் 23 (17), ஜிதேஷ் சர்மா 27 (20) ரன்களில் அதிரடியாக விளையாட முயற்சித்து ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் கடைசி நேரத்தில் சசாந்த் சிங் அதிரடியாக ஒரு பவுண்டர் 2 சிக்ஸருடன் 21* (8) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் பஞ்சாப் 176/6 ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூர் சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஷிகர் தவான் ஆகிய 2 வீரர்கள் கொடுத்த கேட்சை கச்சிதமாக பிடித்த விராட் கோலி ஃபீல்டிங் துறையில் வழக்கம் போல அசத்தினார். இந்த 2 கேட்ச்சுகளையும் சேர்த்து சர்வதேசம் ஐபிஎல் மற்றும் உள்ளூர் ஆகிய அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டிலும் விராட் கோலி 173* கேட்ச்களை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க: தோனியை மேட்ச் பண்ண முடியுமா.. இதுல சச்சின் தலையீடு வேறையா? பாண்டியாவை விமர்சித்த முகமது ஷமி

குறிப்பாக இந்தியாவுக்காக 52 கேட்ச்களை பிடித்துள்ள அவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக 117 கேட்ச்களையும் மாநில அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் 4 கேட்ச்களையும் பிடித்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த இந்திய வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனையை உடைத்த விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. விராட் கோலி : 173*
2. சுரேஷ் ரெய்னா : 172
3. ரோஹித் சர்மா : 167
4. மனிஷ் பாண்டே : 146
5. சூரியகுமார் யாதவ் : 136

Advertisement