தோனியை மேட்ச் பண்ண முடியுமா.. இதுல சச்சின் தலையீடு வேறையா? பாண்டியாவை விமர்சித்த முகமது ஷமி

Mohammed Shami 2
- Advertisement -

விறுவிறுப்பாக துவங்கியுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியிலேயே குஜராத்திடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. மார்ச் 24ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் குஜராத் நிர்ணயித்த 169 ரன்களை துரத்திய மும்பைக்கு ரோகித் சர்மா 43, நமன் திர் 20, தேவால்ட் ப்ரேவிஸ் 46 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

அதனால் கடைசி 5 ஓவரில் 47 ரன்கள் தேதைப்பட்ட மும்பைக்கு கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்ததால் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில் திலக் வர்மா 25, டிம் டேவிட் 11, கேப்டன் பாண்டியா 11 ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்ய தவறியதால் மும்பை பரிதாபமாக தோற்றது. இந்த தோல்விக்கு இந்தியாவின் கேப்டன்ஷிப் காரணமாக அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

தோனி மாதிரி முடியாது:
குறிப்பாக ரசித் கானை எதிர்கொள்வதை தவிர்ப்பதற்காக டிம் டேவிட்டை முன்கூட்டியே அனுப்பிய பாண்டியா 7வது இடத்தில் பேட்டிங் செய்தது தோல்விக்கு காரணமானதாக இர்பான் பதான் விமர்சித்தார். இந்நிலையில் தோனியை போல 7வது இடத்தில் களமிறங்கினால் உங்களால் ஃபினிஷிங் செய்ய முடியாது என்று பாண்டியாவை முகமது ஷமி விமர்சித்துள்ளார்.

மேலும் 7வது இடத்தில் களமிறங்குவது பாண்டியாவை டெயில் எண்டர் போல காட்சிப்படுத்துவதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “தோனி தோனி தான். நீங்கள் மற்றவரை உங்களிடம் பொருத்த முடியாது. தோனி அல்லது கோலி என யாராக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான மனநிலை இருக்கும். எனவே நீங்கள் உங்களுடைய திறமையை அடிப்படையாக வைத்து விளையாட வேண்டும்”

- Advertisement -

“குஜராத்துக்கு கடந்த 2 வருடங்களாக நீங்கள் 3, 4வது இடத்தில் விளையாடினீர்கள். அதற்கு முன்பும் நீங்கள் 5வது இடத்திலேயே விளையாடினார்கள். ஆனால் தற்போது 7வது இடத்தில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்வது டெயில் எண்டர் விளையாடுவதற்கு சமம். ஒருவேளை அவர் முன்கூட்டியே வந்திருந்தால் போட்டி இந்தளவுக்கு சென்றிருக்காது” என்று கூறினார்.

இதையும் படிங்க: வெற்றிக்கு பதவி மட்டும் போதாது.. ருதுராஜை பாத்து கத்துக்கோங்க.. பாண்டியாவுக்கு ரசிகர்கள் அறிவுரை

அதே நிகழ்ச்சியில் மற்றொரு முன்னாள் வீரர் மனோஜ் திவாரி பேசியது பின்வருமாறு. “இது அவருடைய முடிவாக இருக்கும் என்று நான் கருதவில்லை. குஜராத் அணியில் பாண்டியா மற்றும் நெஹ்ரா மட்டுமே அனைத்தையும் முடிவெடுப்பார்கள். ஆனால் மும்பையில் சில பெரிய பெயர்கள் உள்ளன. அவர்கள் தேவால்ட் பிரேவிஸ், திலக் வர்மா போன்ற இளம் வீரர்கள் மீது அதிகமாக முதலீடு செய்துள்ளனர். மார்க் பவுச்சர் கண்டிப்பாக சச்சினின் பேச்சைக் கேட்ட பின்பு தான் அணி நிர்வாகத்திடம் பேசி முடிவெடுப்பார்” என்று கூறினார்.

Advertisement