வெற்றிக்கு பதவி மட்டும் போதாது.. ருதுராஜை பாத்து கத்துக்கோங்க.. பாண்டியாவுக்கு ரசிகர்கள் அறிவுரை

Ruturaj and Pandya
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. இத்தனைக்கும் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மா மும்பை வெற்றிகரமான அணியாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்கிறார். ஆனாலும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித்தை கழற்றி விட்ட மும்பை பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

அந்த சூழ்நிலையில் குஜராத்துக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் பாண்டியா தலைமையில் மும்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியில் ஆரம்பத்திலேயே பும்ராவை பயன்படுத்தாமல் 2 ஓவர்களில் 20 ரன்களை வாரி வழங்கிய பாண்டியா கடைசி நேரத்தில் 7வதாக பேட்டிங் செய்ய வந்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

- Advertisement -

பதவி மட்டும் போதாது:
அதை விட அந்தப் போட்டியில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு அருகே சென்று ஃபீல்டிங் செய்யுமாறு அவர் வற்புறுத்தியது ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் பொதுவாகவே மும்பையின் கேப்டனாக இருந்த வரை ரோகித் சர்மா உள்வட்டத்திற்குள் நின்று ஃபீல்டிங் செய்து கொண்டு அனைத்தையும் கட்டுப்படுத்துவார்.

ஆனால் தற்போது கேப்டன்ஷிப் பதவி கைக்கு வந்ததும் முதல் போட்டியிலேயே ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு அனுப்பிய பாண்டியா அடிக்கடி இடத்தை மாற்றி அலைக்கழித்தார். அதனால் கோபமடைந்த மும்பை ரசிகர்கள் சீனியர் என்ற முறையில் ரோகித் சர்மாவுக்கு விரும்பிய இடத்தில் ஃபீல்டிங் செய்யும் வாய்ப்பை கொடுத்தால் என்ன? என்று பாண்டியா மீது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

- Advertisement -

அதே போல எங்க தல கேப்டன் தோனிக்கு சமமாக 5 கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவுக்கு இப்படி ஒரு நிலைமையா? என்று சிஎஸ்கே ரசிகர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மறுபுறம் இதே சீசனில் அதே ரோஹித் சர்மாவுக்கு சமமான 5 கோப்பைகளை வென்ற எம்.எஸ். தோனி இளம் வீரர் ருதுராஜ் கையில் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பதவியை ஒப்படைத்தார். அந்த வாய்ப்பில் பெங்களூருவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் பல தருணங்களில் சீனியர் என்ற முறையில் தோனிக்கு மதிப்பு கொடுத்து அவருடைய சில ஆலோசனைகளை கேட்டே நடந்து கொண்டார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : 12 வருடங்கள் கழித்து சென்னைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. சிஎஸ்கே அணியின் மீதி – பிளே ஆஃப் அட்டவணை

அப்படி சீனியரின் ஆலோசனையை பின்பற்றி வீண் போகாத ருதுராஜ் தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியிலேயே வெற்றியும் கண்டார். எனவே “வெற்றி பெறுவதற்கு பதவி மட்டும் போதாது, சீனியர்களுக்கு மரியாதை கொடுத்தது பணிவுடன் நடந்து கொல்வதும் அவசியம்” என்பதை ருதுராஜிடம் பார்த்து கற்றுக் கொள்ளுமாறு பாண்டியாவுக்கு ரசிகர்கள் அட்வைஸ் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement