ஐபிஎல் 2024 : 12 வருடங்கள் கழித்து சென்னைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. சிஎஸ்கே அணியின் மீதி – பிளே ஆஃப் அட்டவணை

CSK Chepauk 2
- Advertisement -

உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரின் 2024 சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. வரலாற்றில் 17வது முறையாக நடைபெறும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து 10 அணிகளும் போட்டியிட்டு வருகின்றன. முன்னதாக இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் ஐபிஎல் தொடரின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் நாடாளுமன்ற தேதி வெளியான பின் எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முழு விவரமும் வெளியாகியுள்ளது. அதை மையப்படுத்தி ஐபிஎல் 2024 எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன் படி மே 19ஆம் தேதியுடன் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று முடிகிறது.

- Advertisement -

சென்னைக்கு அதிர்ஷ்டம்:
அதைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றின் முதல் 2 போட்டிகள் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. குறிப்பாக மே 21ஆம் தேதி புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் மோதும் குவாலிபயர் 1 போட்டியும் மே 22ஆம் தேதி 3, 4 இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும் எலிமினேட்டர் போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து குவாலிஃபயர் 1 போட்டியில் தோற்கும் அணியும் எலிமினேட்டரில் வெல்லும் அணியும் மோதும் குவாலிபயர் 2 போட்டி மே 24ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இறுதியாக மே 26ஆம் தேதி ஐபிஎல் 2024 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியும் சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதியே நாடாளுமன்ற தேர்தல் முடிய உள்ளது. அதனால் பாதுகாப்பு கொடுப்பதற்கு எந்த சிக்கலும் ஏற்படாது என்ற காரணத்தால் ஃபைனலை நடத்தும் வாய்ப்பு சென்னைக்கு அதிர்ஷ்டமாக கிடைத்துள்ளது. இதன் வாயிலாக 2012க்குப்பின் 12 வருடங்கள் கழித்து ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதனால் ஃபைனலுக்கு செல்லும் பட்சத்தில் சிஎஸ்கே மீண்டும் கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: 328 ரன்ஸ்.. வேகத்தால் வங்கதேசத்தை தெறிக்க விட்ட இலங்கை.. 38 வருடம் கழித்து தனித்துவமான சாதனை வெற்றி

சிஎஸ்கே அணியின் எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை (* தவிர அனைத்தும் இரவு 7.30 மணிக்கு துவக்கம்):
ஏப்ரல் 8: கொல்கத்தாவுக்கு எதிராக, சென்னை
ஏப்ரல் 14: மும்பைக்கு எதிராக, மும்பை
ஏப்ரல் 19: லக்னோவுக்கு எதிராக, லக்னோ
ஏப்ரல் 23: லக்னோவுக்கு எதிராக, சென்னை
ஏப்ரல் 28: ஹைதராபாத்துக்கு எதிராக, சென்னை
மே 1: பஞ்சாப்புக்கு எதிராக, சென்னை
மே 5: பஞ்சாப்புக்கு எதிராக, தரம்சாலா* (மதியம் 3.30 மணி)
மே 10: குஜராத்துக்கு எதிராக, அகமதாபாத்
மே 12: ராஜஸ்தானுக்கு எதிராக, சென்னை* (மதியம் 3.30 மணி)
மே 18: பெங்களூருவுக்கு எதிராக, பெங்களூரு

Advertisement