328 ரன்ஸ்.. வேகத்தால் வங்கதேசத்தை தெறிக்க விட்ட இலங்கை.. 38 வருடம் கழித்து தனித்துவமான சாதனை வெற்றி

BAN vs SL 2
- Advertisement -

வங்கதேசம் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி மார்ச் சில்ஹெட் நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை 280 ரன்கள் அடித்தது.

இலங்கைக்கு அதிகபட்சமாக கேப்டன் தனஞ்செயா டீ சில்வா 102, கமிண்டு மெண்டிஸ் 102 ரன்கள் குவித்தனர். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக கலீத் அகமது, நஹித் ராணா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் சுமாராக விளையாடி வரும் 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டைஜூல் இஸ்லாம் 47 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

இலங்கை தனித்துவ வெற்றி:
அதன் பின் 92 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் போதும் போதும் என்று வங்கதேசம் சொல்லும் அளவுக்கு அபாரமாக விளையாடி 418 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மீண்டும் மிடில் ஆர்டரில் சதமடித்த கேப்டன் டீ சில்வா 108, கமிண்டு மெண்டிஸ் 164 ரன்கள் குவித்தனர். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இறுதியில் 511 என்ற மெகா இலக்கை துரத்திய வங்கதேசத்துக்கு ஜாகிர் ஹசன் 19, ஹசன் ஜாய் 0, கேப்டன் சாண்டோ 6, ஹொசைன் திபு 0, லிட்டன் டாஸ் 0, மெஹதி ஹசன் 33 என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதனால் எதிர்ப்புறம் மோனிமூல் ஹைக் 82* ரன்கள் எடுத்துப் போராடியும் வங்கதேசத்தை 182 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இலங்கை சார்பில் அதிகபட்சமாக கௌசன் ரஜிதா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

அதனால் 328 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (2) என்ற கணக்கில் முன்னிலைப் பெற்ற இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய 2வது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் இதே வங்கதேசத்துக்கு எதிராக சட்டோகிராம் நகரில் கடந்த 2009ஆம் ஆண்டு 465 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்றதே முந்தைய சாதனையாகும்.

அதை விட இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் விஸ்வா பெர்னாண்டோ 4, கௌசன் ரஜிதா 3, லகிரு குமாரா 3 என வங்கதேசத்தின் 10 விக்கெட்டுகளையும் இலங்கையின் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்ந்து எடுத்தனர். அதே போல 2வது இன்னிங்ஸில் விஸ்வா பெர்னாண்டோ 3, கௌசன் ரஜிதா 5, லகிரு குமாரா 2 என வங்கதேசத்தின் 10 விக்கெட்டுகளையும் இலங்கை 3 வேகப்பந்து வீச்சளார்களே எடுத்தனர்.

இதையும் படிங்க: பரவால்ல முதல் மேட்ச் தானே தோத்தோம்.. மத்தவங்க அதை செய்யாததால் நாங்களும் செய்யல.. ராகுல் பேட்டி

ஸ்பின்னர்கள் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 38 வருடங்கள் கழித்து ஒரு போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்தே 20 விக்கெட்டுகளையும் எடுத்து இலங்கை தனித்துவமான வெற்றி பெற்றது. இதற்கு முன் 1985 மற்றும் 1986இல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக கொழும்புவில் இலங்கை அப்படி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement