பரவால்ல முதல் மேட்ச் தானே தோத்தோம்.. மத்தவங்க அதை செய்யாததால் நாங்களும் செய்யல.. ராகுல் பேட்டி

KL Rahul 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 24 ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற்ற 4வது லீக் போட்டியில் லக்னோவை 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 82*, ரியான் பராக் 43 ரன்கள் எடுத்த உதவியுடன் 194 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த லக்னோவுக்கு டீ காக் 4, படிக்கல் 0, ஆயுஷ் படோனி 1, தீபக் ஹூடா 26 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதை விட துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடாமல் நிதானமாக விளையாடினார். ஆனால் கடைசி வரை அப்படியே விளையாடிய அவர் 58 (44) ரன்களில் அவுட்டாகி முக்கிய நேரத்தில் கைவிட்டார்.

- Advertisement -

போனா போகட்டும்:
அதன் காரணமாக எதிர்ப்புறம் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரான் 64* (41) ரன்கள் எடுத்தும் ஃபினிஷிங் செய்ய முடியாததால் லக்னோ பரிதாபமாக தோற்றது. அதனால் லக்னோ இந்த வருட ஐபிஎல் தொடரின் தோல்வியுடன் துவக்கியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆனால் முதல் போட்டி போனால் போகட்டும் தோற்றத்தைப் பற்றி கவலைப்படவில்லை என்ற வகையில் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை பவர்பிளே ஓவர்களில் மற்ற அணிகள் அதிரடியாக விளையாடாததால் தாங்களும் அதிரடியாக விளையாடவில்லை என்று அசால்டாக கூறும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “இது வெறும் முதல் போட்டி. எனவே அதில் சந்தித்த தோல்வியைப் பற்றி நான் அதிகமாக சிந்தித்து ஆராயப் போவதில்லை. பவர் பிளே என்பது ஒவ்வொரு அணிக்கும் முக்கியம்”

- Advertisement -

“ஆனால் இதுவரை அதை எந்த அணியும் உடைத்ததாக நான் நினைக்கவில்லை. முதல் சீசனில் மோசின் கான் எங்களுடைய பவர் பிளே பவுலராக இருந்தார். ஆனால் கடந்த சீசனில் அவர் ஃபிட்டாக இல்லை. இம்முறை அவரும் நவீனும் மீண்டும் அசத்துவதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. இந்த இலக்கு எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை. அது சராசரியை விட 10 ரன்களுக்கு அதிகமானது”

இதையும் படிங்க: அரிதான காட்சி.. அவமானப்படுத்திய ரசிகர்களின் ஆதரவை சம்பாதிக்க இதை செய்ங்க.. பாண்டியாவுக்கு லாரா அட்வைஸ்

“நாங்கள் நன்றாக பந்து வீசியும் சில தவறுகளை செய்தோம். அதிலிருந்து நாங்கள் பாடங்களையும் கற்றுள்ளோம். ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தும் நாங்கள் 194 ரன்களை நெருங்கியதே எங்களுடைய பேட்டிங் வரிசையின் தரத்தை பற்றி பேசுகிறது. ஆனால் நாங்கள் வெற்றி பெறுவதற்கான வழியை கண்டறிய வேண்டும். இங்கிருந்து நாங்கள் எப்படி வலுவாக மாற முடியும் என்பதை பற்றி பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement