அரிதான காட்சி.. அவமானப்படுத்திய ரசிகர்களின் ஆதரவை சம்பாதிக்க இதை செய்ங்க.. பாண்டியாவுக்கு லாரா அட்வைஸ்

Lara and Pandya
- Advertisement -

அகமதாபாத் நகரில் மார்ச் 24ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 5வது லீக் போட்டியில் மும்பையை 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. முன்னதாக கடந்த 2022இல் குஜராத் அணிக்காக 15 கோடிக்கு வாங்கப்பட்ட ஹர்டிக் பாண்டியா முதல் வருடத்திலேயே கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்தார். ஆனால் இந்த வருடம் அவரை வலுக்கட்டாயமாக வாங்கிய மும்பை ரோகித் சர்மாவை கழற்றி விட்டு தங்களுடைய புதிய கேப்டனாக அறிவித்தது.

அதற்கு மும்பை ரசிகர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மும்பைக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்த நன்றி மறந்து ரோஹித் சர்மாவை மும்பை நிர்வாகம் கழற்றி விட்டதாக ரசிகர்கள் கொந்தளித்தனர். இதற்கிடையே கடந்த 2023 உலகக் கோப்பையில் காயத்தை சந்தித்த பாண்டியா பாண்டியா மேற்கொண்டு இந்தியாவுக்காக விளையாடாமல் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

ரசிகர்கள் எதிர்ப்பு:
அதனால் பணத்திற்காக ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாடும் பாண்டியா இந்தியாவுக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதில்லை என்று ஏற்கனவே இந்திய ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றனர். அந்த சூழ்நிலையில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பையின் கேப்டனாக முதல் முறையாக டாஸ் வீசுவதற்காக வந்த போது அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் இருந்த மொத்த ரசிகர்களும் சேர்ந்து பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அத்துடன் பவுண்டரி எல்லைக்கு அருகே வந்த போதெல்லாம் அவருக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டனர். அதை விட கடைசி ஓவரில் ஃபினிஷிங் செய்ய முடியாமல் பாண்டியா அவுட்டானதும் அதை குஜராத் ரசிகர்களுடன் சேர்ந்து மும்பை ரசிகர்களும் கொண்டாடியது அரிதான நிகழ்வாக அமைந்தது. இந்நிலையில் இந்தியாவில் ஒரு நட்சத்திர இந்திய வீரருக்கு எதிராக இந்திய ரசிகர்கள் இப்படி எதிர்ப்பு தெரிவிப்பதை பார்ப்பது அரிதாக உள்ளதாக கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

- Advertisement -

அதற்கு இந்தியாவுக்காக பாண்டியா தொடர்ந்து விளையாடினால் மட்டுமே மீண்டும் ரசிகர்களின் ஆதரவை பெற முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா கலாய்க்கும் வகையில் பதிலளித்தார். இது பற்றி நேரலையில் அவர்கள் பேசியது பின்வருமாறு.
கெவின் பீட்டர்சன்: “கேப்டனாக இருக்கும் பாண்டியா களத்தில் டைவ் அடித்து பந்தை தடுப்பதற்காக செல்லும் போதெல்லாம் ரசிகர்கள் எதிர்ப்பு கூச்சலிடுகின்றனர். இந்தியாவில் இதை நான் அடிக்கடி கேட்டதில்லை”

இதையும் படிங்க: ரோஹித் மேட்ச் வின்னர்.. அனுபவமில்லாம கில் இப்படி செஞ்சது ஆச்சர்யமா இருக்கு.. சாய் கிசோர் பேட்டி

இயன் பிஷப்: “பாண்டியா இங்கே ரசிகர்களை வெல்ல முடியுமா? அவர்களின் மனதை மீண்டும் வெல்வதற்கு அவர் என்ன செய்ய வேண்டும்?”
பிரையன் லாரா: “இந்தியாவுக்காக விளையாடுங்கள். அடுத்த முறை அவர்கள் இங்கே விளையாடுவார்கள்” என்று சொன்னதும் அந்த 3 முன்னாள் வீரர்களும் சத்தமாக சிரித்தனர்.

Advertisement