ரோஹித் மேட்ச் வின்னர்.. அனுபவமில்லாம கில் இப்படி செஞ்சது ஆச்சர்யமா இருக்கு.. சாய் கிசோர் பேட்டி

Sai Kishore
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பைக்கு எதிரான தங்களுடைய முதல் போட்டியில் குஜராத் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அகமதாபாத் நகரில் மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் தமிழக வீரர் சாய் சுதர்சன் 45, கேப்டன் கில் 31 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 168/6 ரன்கள் சேர்த்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 169 ரன்களை துரத்திய மும்பைக்கு ரோஹித் சர்மா 43, நமன் திர் 20, தேவால்டு ப்ரேவிஸ் 46 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். இருப்பினும் கடைசியில் டிம் டேவிட் 11, திலக் வர்மா 25, கேப்டன் பாண்டியாவை11 ரன்களில் அவுட்டாக்கி ஃபினிஷிங் செய்ய விடாமல் வெற்றி பெற்ற குஜராத்துக்கு அதிகபட்சமாக ஓமர்சாய், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன் மோஹித் சர்மா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

அசத்திய கிசோர்:
இந்த வெற்றிக்கு 45 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதே போல இம்பேக்ட் வீரராக களமிறங்கி 4 ஓவரில் 24 ரன்கள் மட்டும் கொடுத்து ரோகித் சர்மாவின் விக்கெட்டை எடுத்த தமிழக வீரர் சாய் கிஷோர் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். இந்நிலையில் இப்போட்டியில் முதல் முறையாக கேப்டனாக செயல்படுகிறார் என்று உணர முடியாத அளவுக்கு சுப்மன் கில் அசத்தியதாக சாய் கிஷோர் பாராட்டியுள்ளார்.

குறிப்பாக மிடில் ஓவர்களில் தொடர்ந்து 4 ஓவர்களையும் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து வீசுவதற்கான வாய்ப்பை அவர் கொடுத்தது தம்முடைய வேலையை எளிதாக்கியதாக சாய் கிஷோர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் அணியை நன்றாக வழி நடத்தினார். அவர் முதல் முறையாக கேப்டனாக செயல்படுகிறார் என்பது போல் தெரியவில்லை. ஒரு ஸ்பின்னராக எனக்கு அவர் கொடுத்த உள்ளீடுகள் அற்புதமாக இருந்தது”

- Advertisement -

இதையும் படிங்க: மனசுல தோனின்னு நினைப்பா.. உங்க வீரர் ஏன் அதை செய்யல? பாண்டியாவிடம் கவாஸ்கர் காட்டமான கேள்வி

“நீங்கள் 4 ஓவர்களை தொடர்ந்து வீசும் போது அது ஒருநாள் போட்டியை போல இருக்கும். இம்பேக்ட் விதிமுறையால் நாங்கள் 6 பவுலர்கள் விளையாடினோம். எனவே மிடில் ஓவரில் தொடர்ந்து 4 ஓவர்கள் வீசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் பொதுவாக சயீத் முஸ்டாக் அலி, டின்என்பிஎல் போன்ற தொடர்களில் நான் ஓப்பனிங்கில் பந்து வீசுவதால் தலா 1 ஓவர் வீதம் பந்து வீசுவதற்கு தயாராக இருக்கிறேன். ரோகித் சர்மா மேட்ச் வின்னர். அவரைப் போன்ற வீரரை இந்த போட்டியின் முக்கியமான நேரத்தில் அவுட்டாக்கியது சிறப்பானது” என்று கூறினார்.

Advertisement