மனசுல தோனின்னு நினைப்பா.. உங்க வீரர் ஏன் அதை செய்யல? பாண்டியாவிடம் கவாஸ்கர் காட்டமான கேள்வி

Sunil Gavaskar 2
- Advertisement -

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் மார்ச் 24ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 5வது போட்டி நடைபெற்றது. அதில் மும்பையை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் முதல் போட்டியிலேயே வென்றது. மறுபுறம் ரோகித் சர்மாவுக்கு பதிலாக புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பாண்டியா தலைமையில் முதல் போட்டியிலேயே மும்பை தோற்றது.

முன்னதாக அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் சாய் சுதர்சன் 45, கேப்டன் கில் 35 ரன்கள் எடுத்த உதவியுடன் 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய மும்பைக்கு ரோஹித் சர்மா 43, நமன் திர் 20, தேவால்ட் பிரேவிஸ் 46 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதனால் கடைசி 5 ஓவரில் 42 ரன்கள் தேவைப்பட்ட மும்பைக்கு கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்ததால் கண்டிப்பாக வெல்லும் என்று நம்பப்பட்டது.

- Advertisement -

தோனின்னு நினைப்பா:
ஆனால் அப்போது திலக் வர்மா 25, டிம் டேவிட் 11, கேப்டன் பாண்டியா 11 ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்யத் தவறியதால் பரிதாபமாக தோற்றது. குறிப்பாக 16வது ஓவரில் இளம் வீரர் திலக் வர்மா ஒரு சில சிங்கிள் எடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் எதிரில் முழு நேர பேட்ஸ்மேனான டிம் டேவிட் இருந்தும் அதை எடுக்காதது தோல்விக்கு மறைமுக காரணமாக அமைந்தது.

ஏனெனில் கடைசியில் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற மும்பைக்கு அந்த ஓரிரு சிங்கிள்களை எடுத்திருந்தால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக கிடைத்திருக்கும். அதனால் கடுப்பான ரசிகர்கள் மனதிற்குள் தோனின்னு நினைப்பா? என திலக் வர்மாவை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இதைப்பற்றி போட்டியின் முடிவில் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேப்டன் பாண்டியாவிடம் கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் கவாஸ்கர் பேசியது பின்வருமாறு. “ரசித் கான் வீசிய கடைசி ஓவரில் திலக் வர்மா சிங்கிள் எடுக்கவில்லை. இதன் பின்னணியில் ஏதாவது திட்டம் இருக்கிறதா ஹர்டிக்?” என்று கேட்டார். அதற்கு பாண்டியா பதில்ளித்ததற்கு பின்வருமாறு. “உண்மையாக இல்லை. அந்த சமயத்தில் அதுவே சிறந்த ஐடியா என்று திலக் வர்மா உணர்ந்திருப்பார் என நினைக்கிறேன்”

இதையும் படிங்க: பாண்டியா செஞ்ச அந்த 2 தவறால் தான்.. கையிலிருந்த மும்பையின் வெற்றி பறிபோச்சு.. விமர்சித்த இர்பான் பதான்

“எனவே அவருக்கு நான் ஆதரவு கொடுக்கிறேன். எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுக்கு இன்னும் 13 போட்டிகள் இருக்கிறது” என்று கூறினார். இது போக பவர்பிளே ஓவரில் பும்ராவை பயன்படுத்தாமல் தாமாக சென்று 2 ஓவர்களை வீசிய பாண்டியா 1 விக்கெட் கூட எடுக்காமல் 20 ரன்களை வாரி வழங்கியதும் தோல்விக்கு காரணமானது குறிப்பிடத்தக்கது.

Advertisement