IND vs AUS : 14 மாதங்கள் கழித்து நிம்மதி பெருமூச்சு விட்ட விராட் கோலி, பிரைன் லாராவை முந்தி இந்திய மண்ணில் 5வது வீரராக புதிய சாதனை

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 3வது போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதனால் மார்ச் 9ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் துவங்கிய கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றால் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல முடியும் என்று நிலைமையில் களமிறங்கிய இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஃபிளாட்டாக இருந்த பிட்ச்சில் சிறப்பாக செயல்பட்டு 480 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சதமடித்து 180 ரன்களும் இளம் வீரர் கேமரூன் கிரீன் சதமடித்து 114 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 74 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அனைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா 35 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தற்போது உச்சகட்ட பார்மில் இருக்கும் சுப்மன் கில் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதமடித்தார். அவருடன் 2வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய புஜாரா தனது பங்கிற்கு 42 ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

நிம்மதி பெருமூச்சு:
அந்த நிலைமையில் களமிறங்கிய விராட் கோலியுடன் கைகோர்த்த சுப்மன் கில் 3வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது 12 பவுண்டரி 1 சிக்சருடன் 128 (235) ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவதால் 3வது நாள் முடிவில் 289/3 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இன்னும் 191 ரன்கள் பின்தங்கியுள்ளது. களத்தில் விராட் கோலி 59*, ஜடேஜா 16* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் 25000+ ரன்களையும் 74 சதங்களையும் அடித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நம்பிக்கை நாயகனாக செயல்பட்டு வரும் விராட் கோலி 2019ஆம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக 70வது சதமடித்தார்.

அதன் பின் பார்மை இழந்து தடுமாறிய அவர் அதற்காக அணியிலிருந்து நீக்குமாறு சந்தித்த கடுமையான விமர்சனங்களை கடந்த 2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து அடித்து நொறுக்கினார். அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு சமீபத்திய வங்கதேசம் மற்றும் இலங்கை ஒருநாள் தொடர்களில் சதமடித்து முழுமையான ஃபார்முக்கு திரும்பிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இன்னும் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வருகிறார்.

- Advertisement -

அந்த நிலையில் இத்தொடரின் முதல் 3 போட்டிகளிலும் தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் அம்பயரின் சில தவறான தீர்ப்பால் சொற்ப ரன்களில் அவுட்டான அவர் இப்போட்டியில் 59* ரன்கள் குவித்து தன்னுடைய விமர்சனங்களின் சத்தத்தை ஓரளவு குறைத்துள்ளார். குறிப்பாக கடைசியாக கடந்த 2022 ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அரை சதம் அடித்திருந்த அவர் ஒரு வழியாக தனது கேரியரில் முதல் முறையாக 16 இன்னிங்ஸ் பெரிய இடைவெளிக்கு பின் 14 மாதங்கள் கழித்து அரை சதமடித்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.

1. இந்த 59* ரன்களையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் 4000 ரன்கள் குவித்த 5வது இந்திய வீரர் என்ற சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 7216
2. ராகுல் டிராவிட் : 5598
3. சுனில் கவாஸ்கர் : 5067
4. வீரேந்தர் சேவாக் : 4656*
5. விராட் கோலி : 4000*

- Advertisement -

2. அத்துடன் சொந்த மண்ணில் அதிவேகமாக 4000 டெஸ்ட் ரன்கள் அடித்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. வீரேந்திர சேவாக் : 71 இன்னிங்ஸ்
2. சச்சின் டெண்டுல்கர் : 72 இன்னிங்ஸ்
3. விராட் கோலி : 77 இன்னிங்ஸ் *

3. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக அரை சதங்கள் அடித்த 3 வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 51
2. விவ் ரிச்சர்ட்ஸ் : 42
3. விராட் கோலி : 39*
4. பிரையன் லாரா/டேஸ்மண்ட் ஹெய்ன்ஸ் : தலா 38

இதையும் படிங்க: NZ vs SL : ரொம்ப தேங்க்ஸ் மிட்சேல், சதமடித்த நியூஸிலாந்து வீரருக்கு நன்றி சொல்லும் இந்திய ரசிகர்கள் – காரணம் இதோ

இந்த சாதனைகளுடன் 4வது நாளில் சதமடித்து தன் மீதான விமர்சனங்களை முழுமையாக விராட் கோலி துடைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement