NZ vs SL : ரொம்ப தேங்க்ஸ் மிட்சேல், சதமடித்த நியூஸிலாந்து வீரருக்கு நன்றி சொல்லும் இந்திய ரசிகர்கள் – காரணம் இதோ

- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் நடப்பு சாம்பியனாக திகழும் நியூசிலாந்து ஏற்கனவே ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பு கோட்டை விட்டுள்ளது. மறுபுறம் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் இலங்கை தற்போது அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் இந்தியா தோற்கும் என்ற நம்பிக்கையுடன் இத்தொடரில் 2 – 0* (2) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றி பதிவு செய்து ஃபைனலுக்கு தகுதி பெறலாம் என்ற லட்சியத்துடன் களமிறங்கியுள்ளது.

அந்த நிலைமையில் மார்ச் 9ஆம் தேதியன்று ஹஜ்லி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை 355 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு கேப்டன் கருணரத்னே 50, குசால் மெண்டிஸ் 87, ஏஞ்சலோ மேத்யூஸ் 47, டீ சில்வா 46 என களமிறங்கிய அனைத்து வீரர்களும் கணிசமான நல்ல ரன்களை எடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கேப்டன் டிம் சவுதி 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

தேங்ஸ் தம்பி:
அதை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 30, டாம் லாதம் 67 என தொடக்க வீரர்கள் 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருப்பினும் கேன் வில்லியம்சன் 1, ஹென்றி நிக்கோலஸ் 2, டாம் ப்ளன்டல் 7 என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் 2வது நாள் முடிவில் 162/5 ரன்களுடன் நியூசிலாந்து தடுமாறியது அந்நாட்டு ரசிகர்களை விட இந்திய ரசிகர்களை கலக்கமடைய வைத்தது.

அந்த நிலைமையில் இன்று துவங்கிய 3வது நாளில் சவாலை கொடுத்த இலங்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்த டார்ல் மிட்சேல் நங்கூரமாக நின்று ரன்களை சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக மைக்கேல் பிரேஸ்வெல் 25, கேப்டன் டிம் சௌதீ 25 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை குவித்து போராடி அவுட்டானார்கள். அதை பயன்படுத்தி மறுபுறம் நிலைத்து நின்று சிறப்பாக பேட்டிங் செய்த டார்ல் மிட்சேல் 6 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 102 ரன்கள் குவித்து ஓரளவு காப்பாற்றி அவுட்டானார்.

- Advertisement -

அவரது போராட்ட பேட்டிங்கை வீணடிக்காத வகையில் அடுத்து வந்த மாட் ஹென்றி அதிரடியாக 10 பவுண்டரி 3 சிக்சருடன் 72 (75) ரன்களை குவித்து நியூசிலாந்துக்கு முன்னிலை ரன்களை பெற்றுக் கொடுத்து அவுட்டானார். அவருடன் 10வது இடத்தில் களமிறங்கி 9வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய நெய்ல் வாக்னர் 1 பவுண்டரி 3 சிக்சருடன் அதிரடியாக 27 (24) ரன்கள் குவித்து கடைசி பேட்ஸ்மேனாக அவுட்டானார். அதன் காரணமாக ஒரு கட்டத்தில் 300 ரன்கள் தொடுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 373 ரன்கள் குவித்து 18 ரன்கள் முன்னிலையும் பெற்றது.

இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை 3வது நாள் முடிவில் 83/3 ரன்கள் எடுத்துள்ளது. பெர்னாண்டோ 28, கருணரத்னே 17, குசால் மெண்டிஸ் 14 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு களத்தில் மேத்தியூஸ் 20*, ஜெயசூர்யா 2* ரன்களுடன் உள்ளனர். தற்போதைய நிலைமையில் இலங்கை 65 ரன்கள் முன்னிலை பெற்றாலும் 7 விக்கெட் மட்டுமே கைவசம் இருப்பதால் வெற்றி இருதரப்புக்கும் சமமாக இருக்கிறது.

- Advertisement -

அதில் சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக கருதப்படும் நியூசிலாந்து கடைசி 2 நாட்களில் அசத்தலாக செயல்பட்டு வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. மறுபுறம் அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் பிளாட்டான பிட்ச்சில் ஆஸ்திரேலியா 480 ரன்களை எடுத்துள்ள நிலையில் இந்தியாவும் பதிலுக்கு மெதுவாக பேட்டிங் செய்து வருவதால் அப்போட்டி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:வீடியோ : மீண்டும் அத்து மீறிய சாகிப் அல் ஹசன், கோபத்தால் ரசிகர் மீது தாக்குதல் – வங்கதேச ரசிகர்கள் அதிருப்தி

அதனால் இலங்கை தோற்றால் தான் ஃபைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலைமையால் அப்போட்டியை விட இப்போட்டியை இந்திய ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் 2வது நாளில் தோல்வியின் பிடியில் சிக்கிய நியூசிலாந்தை சதமடித்து வெற்றி பாதைக்கு திருப்பி விட்ட டார்ல் மிட்சேல் மற்றும் டெயில் எண்டர் பேட்ஸ்மேன்களை பாராட்டி இந்திய ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement