ஒய்ட் பால் கிரிக்கெட்டின் கில்லியாக.. சச்சின் உட்பட உலகில் வேறு யாருமே செய்யாத சாதனை படைத்த கிங் கோலி

Virat Kohli 50
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தாவில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா இந்தியா 50 ஓவர்களில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 326/5 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதமடித்து 101*, ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் லுங்கி, யான்சென், ரபாடா, மகாராஜ், சம்சி தலா 1 விக்கெட் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 327 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்கா ஆரம்ப முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 83 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

ஒய்ட் பால் கிரிக்கெட்டின் கிங்:
அதிகபட்சமாக மார்க்கோ ஜான்சன் 14 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றி பெற வைத்தார். இதனால் உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தங்களுடைய அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது. மேலும் இதுவரை விளையாடிய 8 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியான 8 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்தை தனதாக்கியது.

இந்த வெற்றிக்கு கடினமான கொல்கத்தா மைதானத்தில் சதமடித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
முன்னதாக இப்போட்டியில் அடித்த சதத்தையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் ஆல் டைம் சாதனையை சமன் செய்த (தலா 49) விராட் கோலி உலகக்கோப்பையில் பிறந்தநாளில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றையும் படைத்தார்.

- Advertisement -

அதை விட ஒருநாள் கிரிக்கெட்டில் 49* சதங்கள் அடித்துள்ள அவர் டி20 கிரிக்கெட்டில் கடந்த 2022 ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 1* சதம் அடித்துள்ளதை அனைவரும் அறிவோம். இதன் வாயிலாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அடங்கிய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் உலகிலேயே 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற வேறு எந்த வீரரும் படைக்காத மாபெரும் உலக சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 365 நாட்களாச்சு.. சீக்கிரம் அதையும் செய்ங்க.. தனது வாழ்நாள் சாதனையை சமன் செய்த கிங் கோலியை வாழ்த்திய சச்சின்

அவருக்கு அடுத்தபடியாக மற்றொரு இந்திய நம்பிக்கை நட்சத்திரம் கேப்டன் ரோஹித் சர்மா 31 ஒருநாள் மற்றும் 4 டி20 என மொத்தம் 35 சதங்களுடன் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 2வது வீரராக ஜொலித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து இந்தியா தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்தை தீபாவளி தினத்தன்று எதிர்கொள்ள தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement