ஏற்கனவே 8 முறை அவுட் ஆகியிருக்காரு.. விராட் கோலி இறுதிப்போட்டியில் சுதாரிக்க வேண்டிய – பவுலர் அவர்தான்

Kohli-Out
Advertisement

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு சென்றடைந்துள்ளது. அந்த வகையில் எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணியானது மீண்டும் ஒருமுறை அவர்களை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பெறும் வெற்றிகளுக்கு மிக முக்கியமான காரணமாக விராட் கோலி திகழ்ந்து வருகிறார் என்றால் மிகையல்ல. ஏனெனில் இதுவரை இந்திய அணி பங்கேற்றுள்ள 10 ஆட்டங்களில் விராட் கோலி 101 ரன்கள் சராசரியுடன் 711 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். அதில் 3 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும்.

ஒவ்வொரு போட்டியிலுமே அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி இறுதிப்போட்டியிலும் சிறப்பாக விளையாடுவார் என்று அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த கடைசி இறுதிப் போட்டியில் விராட் கோலி கவனித்து விளையாட வேண்டிய ஒரே ஒரு பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா தான் என்று கணிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஏனெனில் இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக லெக் ஸ்பின்னர்கள் 57 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வேளையில் அதில் ஆடம் ஜாம்பா மட்டும் தனிநபராக 22 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தி உள்ளார். அதுமட்டும் இன்றி மிடில் ஓவர்கள் என்று கூறப்படும் 11 முதல் 40 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 38 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ள வேளையில் அதில் ஜம்பா மட்டும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒவ்வொரு போட்டியிலுமே அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வாரும் அவர் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் பந்துவீசி பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க வைத்து வருகிறார்.

இதையும் படிங்க : உலகக்கோப்பை 2023 : இறுதிப்போட்டியை நேரில் வந்து பார்க்குமாறு ஸ்பெஷல் அழைப்பு – யார் யார் வராங்க தெரியுமா?

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியை 8 முறை வீழ்த்தியுள்ள ஆடம் ஜாம்பா இந்த இறுதிப் போட்டியிலும் நிச்சயம் விராட் கோலிக்கு எதிராக பல்வேறு திட்டங்களை கைவசம் வைத்திருப்பார் என்பதனால் அவரது பந்துவீச்சை விராட் கோலி கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அப்படி அவர் சுதாரித்து விட்டால் நிச்சயம் அவர் இறுதி வரை நின்று பெரிய ஸ்கோரை எட்டவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement