உலகக்கோப்பை 2023 : இறுதிப்போட்டியை நேரில் வந்து பார்க்குமாறு ஸ்பெஷல் அழைப்பு – யார் யார் வராங்க தெரியுமா?

BCCI
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய ஐசிசியின் 13-வது ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியுடன் நிறைவடைய உள்ளது. இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தொடரின் லீக் ஆட்டங்களில் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஒரு போட்டியில் கூட தோற்காமல் அரையிறுதிக்கு முன்னேறியது. அதேபோன்று அரையிறுதியில் நியூசிலாந்தை வென்று தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால் இந்திய அணியே இறுதி போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

அதே வேளையில் ஐந்து முறை உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியும் இம்முறை இந்தியாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்த தயாராகி வருவதால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டி அனைவரது மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த பிரமாண்டமான இறுதி போட்டியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களும், பல்வேறு பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தற்போது இந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியை காண ஸ்பெஷல் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 12 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்களிலும் சாம்பியன் பட்டத்தை வென்ற கேப்டன்களையும் நேரில் வந்து போட்டியை காணுமாறு பி.சி.சி.ஐ அழைப்பு விடுத்துள்ளது. எனவே பிசிசிஐ-யின் அழைப்பை ஏற்று இதுவரை ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டங்களை வென்ற கேப்டன்கள் நேரில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : இந்த உலககோப்பை தொடரில் பல வீரர்கள் தசைப்பிடிப்பால் பாதிக்கப்படுவது ஏன்? – விவரம் இதோ

அந்த வகையில் கபில் தேவ், மஹேந்திர சிங் தோனி, ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், இயான் மோர்கன் போன்ற பல கேப்டன்கள் நேரில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள வேளையில் நேரில் வரும் முன்னாள் கேப்டன்களுக்கும் சிறப்பான வரவேற்பை வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் பிசிசிஐ தயார் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement