இந்த உலககோப்பை தொடரில் பல வீரர்கள் தசைப்பிடிப்பால் பாதிக்கப்படுவது ஏன்? – விவரம் இதோ

Cramp
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணியும், தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும் நவம்பர் 19-ஆம் தேதி இறுதிப்போட்டியில் விளையாட இருக்கிறது. அகமதாபாத் நகரில் நடைபெறவுள்ள இந்த பிரம்மாண்டமான போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த போட்டியில் பலம் வாய்ந்த இரண்டு அணிகள் மோதுவதால் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடர் முழுவதுமே நடைபெற்று வரும் சில சுவாரசியமான விடயங்கள் அவ்வப்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பை தொடரில் ஏகப்பட்ட வீரர்கள் போட்டியின் போது தசைப்பிடிப்பினால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக இந்திய வீரர்கள் சுப்மன் கில், விராட் கோலி, கே.எல் ராகுல் போன்றோர் தசை பிடிப்பால் அவ்வப்போது வலியை உணர்ந்தனர். அதேபோன்று மேக்ஸ்வெல்லும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தசைப் பிடிப்போடு விளையாடி 200 ரன்கள் அடித்திருந்தார்.

அதேபோன்று பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தசைப்பிடிப்போடு போராடியே சதம் அடித்தார். மேலும் பல வீரர்கள் இந்த உலககோப்பை போட்டிகளின் போது தசைப் பிடிப்பு ஏற்பட்டதால் மாத்திரை எடுத்துக் கொண்டதையும் நாம் பார்க்க முடிந்தது. இப்படி தசைப்பிடிப்பு ஏற்பட்டு வீரர்கள் தடுமாற என்ன காரணம்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம்.

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் சூடான தட்பவெப்ப நிலைகளில் விளையாடும் வீரர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தொடர்ந்து விளையாடும்போது அவர்களிடம் உள்ள உடலின் நீர்ச்சத்து குறைவதாலும், உடலில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாமல் இருந்ததாலும், அதிக உடல் உழைப்பை வெளிப்படுத்தும் போதும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : உலகக்கோப்பை 2023 : இறுதிப்போட்டியே ஆடல.. அதுக்குள்ளே விருதினை உறுதி செய்த கிங் கோலி – விவரம் இதோ

அதோடு அதிக வெயிலில் விளையாடும் வீரர்கள் போதிய திறனை விட கூடுதல் திறனை களத்தில் வெளிப்படுத்தும்போது உடலில் உள்ள நீரின் அளவு குறைந்து தசைப்பிடிப்பு ஏற்படலாம் என்றும் கூறுகின்றனர். இதன் காரணமாகவே போட்டியின் இடையே அடிக்கடி வீரர்கள் தண்ணீர் மற்றும் குளிர்பானம் போன்றவற்றை அருந்துகிறார்கள். அதையும் தாண்டி சில வீரர்களுக்கு தசைப்பிடிப்பு ஏற்படுகிறது. அப்போதெல்லாம் அவர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டு தொடர்ந்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement