அதை மட்டும் சொல்லாதீங்க.. தலை வணங்கிய சிராஜ்.. ரசிகர்களிடம் க்யூட்டாக பதிலளித்த விராட் கோலி

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக ஏப்ரல் பதினொன்றாம் தேதி வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 25வது லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற அந்த அணி வெற்றி பாதைக்கு திரும்பியது. மறுபுறம் 6 போட்டியில் 5வது தோல்வியை பதிவு செய்த பெங்களூரு பெரிய பின்னடைவை சந்தித்தது.

முன்னதாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை இந்த வருடம் கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு மும்பை ரசிகர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் பதவி கைக்கு வந்ததும் முதல் போட்டியிலேயே ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு ஹர்டிக் பாண்டியா வற்புறுத்தினர்.

- Advertisement -

விராட் கோலியின் அன்பு:
அதனால் வான்கடே மைதானத்தில் தங்கள் கேப்டன் என்றும் பாராமல் பாண்டியாவுக்கு மும்பை ரசிகர்களே கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அப்போது எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ரோகித் சர்மா பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். அந்த நிலையில் பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியிலும் மும்பை ரசிகர்கள் பாண்டியாவுக்கு கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி. “என்ன இது. பாண்டியாவும் இந்திய வீரர் தானே கை தட்டி பாராட்டு கொடுங்கள்” என்ற வகையில் சைகை செய்து ரசிகர்களை கேட்டுக்கொண்டார். அதே போல மற்றொரு தருணத்தில் மும்பை பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கியதால் பெங்களூருவின் தோல்வி உறுதியானது. அப்போது மைதானத்தில் இருந்து ரசிகர்கள் “கோலிக்கு பவுலிங் கொடுங்க” என்று கூச்சலிட்டு கோரிக்கை வைத்தனர்.

- Advertisement -

அதற்கு சிரித்துக் கொண்டே 2 காதுகளில் கைவைத்த விராட் கோலி “பவுலிங் மட்டும் போட சொல்லாதீங்க” என்ற வகையில் க்யூட்டாக ரசிகர்களிடம் கொடுத்த ரியாக்சன் மனதை தொடும் வகையில் அமைந்தது. அத்துடன் இந்த போட்டியில் பெங்களூருவின் முதன்மை பவுலர் முகமது சிராஜ் 3 ஓவரில் 37 ரன்கள் கொடுத்து சுமாராக செயல்பட்டார்.

இதையும் படிங்க: சபாஷ் டிகே.. அதானே உங்க எண்ணம்.. ஒரே ஓவரில் 4 மேஜிக் நிகழ்த்திய கார்த்திக்கை.. கலாய்த்து பாராட்டிய ரோஹித் சர்மா

மறுபுறம் 4 ஓவரில் 21 ரன்கள் மட்டும் கொடுத்த பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்து பெங்களூருவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராகவும் சாதனை படைத்தார். அதனால் ஆச்சரியமடைந்த சிராஜ் “உங்களால் மட்டும் எப்படி இப்படி செயல்பட முடிகிறது. நீங்க வேற லெவல்” என்ற வகையில் போட்டி முடிந்ததும் கை கொடுக்கும் தருணத்தில் பும்ராவுக்கு முன்பு தலைவணங்கி கை கொடுத்து கட்டிப்பிடித்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

Advertisement