சபாஷ் டிகே.. அதானே உங்க எண்ணம்.. ஒரே ஓவரில் 4 மேஜிக் நிகழ்த்திய கார்த்திக்கை.. கலாய்த்து பாராட்டிய ரோஹித் சர்மா

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் பதினொன்றாம் தேதி நடைபெற்ற 25வது லீக் போட்டியில் பெங்களூருவை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை இந்தியன்ஸ் தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்தது. வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு கேப்டன் டு பிளேஸிஸ் 61, ரஜத் படிடார் 50, தினேஷ் கார்த்திக் 53* ரன்கள் எடுத்த உதவியுடன் 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் சேசிங் செய்த மும்பைக்கு ரோஹித் சர்மா 38, இசான் கிசான் 69, சூரியகுமார் யாதவ் 52, கேப்டன் ஹர்டிக் பாண்டியா 21*, திலக் வர்மா 16* ரன்கள் அடித்து நொறுக்கி 15.3 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 6 போட்டிகளில் 5வது தோல்வியை பதிவு செய்த பெங்களூரு தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் கீழே தவித்து வருகிறது.

- Advertisement -

கலாய்த்த ரோஹித்:
முன்னதாக இந்தப் போட்டியில் மிடில் ஓவர்களில் களமிறங்கிய தமிழக மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் தம்முடைய அனுபவத்தை பயன்படுத்தி பெங்களூரு பவுலர்களை அடித்து நொறுக்கினார். குறிப்பாக ஆகாஷ் மாத்வால் வீசிய ஒரு ஓவரில் 4 முறை திடீரென இடது பக்கமாக திரும்பி ஸ்கூப் ஷாட் அடிக்க முயற்சித்த தினேஷ் கார்த்திக் அந்த 4 முறையிலுமே வெற்றிகரமாக பவுண்டரியை பறக்க விட்டார்.

அதை பார்த்து வியந்த ரோகித் சர்மா அருகே சென்று. “சபாஸ் டிகே. இப்போது இவரை உலகக் கோப்பையில் விளையாட தேர்வு செய்ய வேண்டும்” என்று கைதட்டி பாராட்டி தினேஷ் கார்த்திக்கை கலாய்த்தார். அதாவது வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அதில் “இந்தியாவுக்கு விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் தானே இப்படி மும்பையை அடிக்கிறீர்கள்” என்று அவரை ரோஹித் சர்மா கலாய்த்து பாராட்டினார்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியில் 5 பவுண்டரி 4 சிக்சரை பறக்க விட்ட தினேஷ் கார்த்திக் 230.43 ஸ்ட்ரைக் ரேட்டில் 53* (23) ரன்கள் குவித்து பெங்களூருவுக்கு அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தார். சொல்லப்போனால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் 2022 ஐபிஎல் தொடரில் 330 ரன்களை அடித்து மிரட்டியதால் இந்தியாவுக்காக கம்பேக் கொடுத்து ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் விளையாடினார்.

இதையும் படிங்க: 5.2 எக்கனாமி.. கிங் கோலியை அடக்கிய பும்ரா.. ஜடேஜாவை முந்தி பெங்களூருவை தெறிக்க விடுவதில் 2 வரலாற்று சாதனை

ஆனால் அதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் மீண்டும் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். இருப்பினும் தற்போது டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள இந்த வருடத்தில் மீண்டும் அவர் ஐபிஎல் தொடரில் அசத்தி வருகிறார். ஆனால் தற்போது ரிங்கு சிங் போன்ற வீரர்கள் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.

Advertisement