5.2 எக்கனாமி.. கிங் கோலியை அடக்கிய பும்ரா.. ஜடேஜாவை முந்தி பெங்களூருவை தெறிக்க விடுவதில் 2 வரலாற்று சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் பதினொன்றாம் தேதி நடைபெற்ற 25வது லீக் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்திய மும்பை 2வது வெற்றியை பதிவு செய்தது. வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு கேப்டன் டு பிளேஸிஸ் 61, ரஜத் படிடார் 50, தினேஷ் கார்த்திக் 53* ரன்கள் எடுத்த உதவியுடன் 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த மும்பைக்கு ரோஹித் சர்மா 38, இசான் கிசான் 69, சூரியகுமார் யாதவ் 52, கேப்டன் ஹர்டிக் பாண்டியா 21*, திலக் வர்மா 16* ரன்கள் அடித்து நொறுக்கினர். அதனால் 15.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய மும்பை அதிரடியான பெற்றது. அதனால் 6 போட்டிகளில் 5வது தோல்வியை பதிவு செய்த பெங்களூரு மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

- Advertisement -

ஆல் டைம் நாயகன்:
இந்த வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய பும்ரா ஆட்டநாயகன் விருதுகின்றார். குறிப்பாக சுமார் 400 ரன்கள் அடிக்கப்பட்ட இப்போட்டியில் இரு அணிகளை சேர்ந்த மற்ற பவுலர்கள் 7க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கிய நிலையில் 4 ஓவரில் 21 ரன்களை மட்டும் கொடுத்த பும்ரா 5.2 என்ற எக்கனாமியில் துல்லியமாக பந்து வீசினார்.

அந்தளவுக்கு பெங்களூரு அணியை தெறிக்க விட்ட அவர் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியையும் நங்கூரத்தை போட விடாமல் ஆரம்பத்திலேயே அவுட்டாக்கினார். அந்த வகையில் 21 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா 17 வருட ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணிக்கு எதிராக ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

அது போக ஐபிஎல் தொடரில் இதுவரை பெங்களூரு அணிக்கு எதிராக மொத்தம் பும்ரா 29* விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் ரவீந்திர ஜடேஜா மற்றும் சந்திப் சர்மா ஆகியோர் தலா 26 விக்கெட்டுகள் பெங்களூரு அணிக்கு எதிராக எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: அவர் எங்க டீம்ல் இருக்குறது எங்களுக்கு கிடைச்ச அதிர்ஷ்டம்.. பெங்களூரு அணிக்கெதிரான வெற்றி குறித்து – ஹார்டிக் பாண்டியா பேட்டி

அத்துடன் ஐபிஎல் தொடரில் அதிக முறை 5 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற ஜெய்தேவ் உனட்கட், ஜேம்ஸ் பஃல்க்னர் ஆகியோரின் சாதனையையும் பும்ரா சமன் செய்தார். அந்த வகையில் பும்ரா, சூரியகுமார் யாதவ் போன்ற நட்சத்திர வீரர்கள் அசத்த துவங்கியதால் மீண்டும் மும்பை வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement