அவர் எங்க டீம்ல் இருக்குறது எங்களுக்கு கிடைச்ச அதிர்ஷ்டம்.. பெங்களூரு அணிக்கெதிரான வெற்றி குறித்து – ஹார்டிக் பாண்டியா பேட்டி

Hardik-Pandya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும் மோதின. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது.

பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 61 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 53 ரன்களையும் குவித்தனர். பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிவானது 15.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 199 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 63 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 52 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பாண்டியா கூறுகையில் : எப்பொழுதுமே ஒரு வெற்றியை பெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றது சிறப்பாக இருந்தது.

இம்பேக்ட் பிளேயர் ரூல்ஸ் இருப்பதன் மூலம் ஒரு கூடுதல் பவுலரை அணியில் சேர்த்து விளையாட முடிகிறது. அது எனக்கும் சில சமயங்களில் சாதகமாக அமைகிறது. ஒருவேளை ஒரு பவுலர் அந்த நாளில் சிறப்பாக பந்துவீசவில்லை என்றால் மற்ற பவுலர்களை வைத்து அதனை சமாளித்து விடலாம். இந்த போட்டியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

- Advertisement -

அதேபோன்று நான் டீம் மீட்டிங்கில் போட்டியை சீக்கிரமே முடிக்க வேண்டும் என்று பேசியதே கிடையாது. ஆனாலும் ரன் ரேட்டை அதிகப்படுத்தி விளையாடி எங்கள் அணியின் வீரர்கள் ஆட்டத்தை முடித்துக் கொடுத்துள்ளார்கள். அதுதான் ஒரு அணிக்கு அழகாக நான் பார்க்கிறேன். பும்ரா எங்கள் அணியில் இருப்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் எப்போது அவரை பந்துவீச அழைத்தாலும் மிக சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்து தருகிறார்.

இதையும் படிங்க : உடம்பு தான் அங்க இருந்துச்சு.. பும்ரா காலை உடைச்சுடுவாரு.. 17 பந்தில் 50 ரன்ஸ் நொறுக்கிய.. சூரியகுமார் பேட்டி

போட்டிக்கு முன்னதாக நிறையவே பயிற்சி செய்யும் அவர் போட்டியின் போதும் எங்களுக்கு பெரிய அனுகூலத்தை தருகிறார். சூரியகுமார் யாதவ் மீண்டும் வந்து முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்தது எங்களது அணியின் பலத்தை பெரியளவில் நீட்டித்துள்ளது. இனிவரும் போட்டிகளில் நாங்கள் இதே வெற்றியை தொடர்வோம் என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement